முகப்புப் பக்கம் 11வது பீடாதிபதி அருளாட்சி ஆணைகள் குருதேவர் ஏடுகள் காலக் கணக்கீடு இந்து மதம் காயந்திரி மந்தரம் தமிழர் வரலாறு பீடாதிபதிகள் பற்றி கருவூறார்கள் தந்தை பெரியார் சித்தர்கள் அன்பு சேவுக! எங்களைப் பற்றி வினா விடைகள் மாத வெளியீடுகள் அச்சிட்ட புத்தகங்கள் உள்ளுறை பட்டியல் 
காலடி ஆதிசங்கரர் உண்மை வரலாறு | | 
"இந்து மத எழுச்சியே இந்தியாவின் செழுச்சி!" "இந்தியாவின் செழுச்சியே இம்மானுட நல விழிச்சி!" இந்த மெய்யான இந்துமதமே மதத்துறையின் தாயாகவும், மூலமாகவும், கருவூலமாகவும், நாற்றுப் பண்ணையாகவும் இருந்து வருகின்றது. இந்த மெய்யான இந்துமதம் பற்றிய உண்மைகளை முதலில் தமிழர்கள், பின் இந்தியர்கள் புரிந்து கொண்டால் இன்றைக்கு இருக்கும் அனைத்து விதமான போராட்ட நிலைகளும், ஆதிக்க நிலைகளும், பொருள் ஆதாரம் பற்றிய மயக்க நிலைகளும், குழப்ப நிலைகளும், கேவலங்களும், அவலங்களும், ... உலக அளவில் அகன்று விடும். எனவேதான், கி.மு.43,71,101இல் இந்துமதத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கிய பதினெண் சித்தர் பீடாதிபதிகளே காலங்கள் தோறும் தோன்றித் தோன்றி இந்துமதம் மறுமலர்ச்சி, வளவளர்ச்சி, வலிமைமிகு ஆட்சிமீட்சி,... முதலியவைகளை நிறைவேற்றும் இந்துமதத் தந்தையாக, உலக மானுட நலக் காவலராக விளங்குகின்றனர்.  இந்தப் பதினெண்சித்தர் பீடாதிபதிகள் வழியில் 11 பதினெண்சித்தர் பீடாதிபதிகளுக்குப் பின் இராசிவட்ட நிறைவுடையாராக திருத்தோற்றம் நல்கியவரே குருதேவர் பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள். (கி.பி.1936 - கி.பி. 1998) இவர் கருவிலேயே பெற்ற திருவுடன் இலைமறைகாயாகவே செயல்பட்டார். இவர் சாதி, இன, மொழி, நாட்டு...வேறுபாடுகளோ, வெறிகளோ இல்லாமல் 'உலக ஆன்ம நேய ஒருமைப்பாட்டையும்', 'உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயத்தையும்' உருவாக்கும் பணியில் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். இவர் 'மதம் ஒரு சமூக விஞ்ஞானமே', 'மதமே மனிதப் பண்பைப் பாதுகாத்துப் பயிர் செய்யக் கூடியது', 'மதமே கலைகளுக்கும் அறிவியல்களுக்கும் தாய்', 'மதமே பொறுமையையும், பொறுப்புணர்ச்சியையும் ஈன்றெடுப்பது', 'மதமே தனிமனித, குடும்ப, சமுதாய அமைதியையும், நிறைவையும், நிம்மதியையும், சமாதானத்தையும் விளைவிக்கும் ஆற்றலுடைய உழவன்', 'மதமே மனித வாழ்வுக்குரிய பொருளை வழங்குவது', 'மதமே மனித வாழ்வின் வேக, தாக, மோக வெறிகளை நெறிப்படுத்தும் ஆற்றலுடையது', ..... என்ற கருத்து விளக்க வாசகங்களை வழங்கி உலக மத மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்டார். |

காயந்திரி மந்தரம் இதையே வடமொழியில் காயத்ரி மந்த்ரம் என்று மொழித் திருத்தம் செய்து விட்ட்னர். | தமிழே அருளுலக ஆட்சி மொழி; தமிழரே இம்மண்ணுலகின் வழிகாட்டிகள். - தமிழர்கள்தான், இம்மண்ணுலகின் அருளுலக வாரிசுகள், வழிகாட்டிகள், தத்துவ வித்துக்கள்...... தமிழினம் குறையும்போது அருளுலகம் இருண்டு போகும், வறண்டு போகும். அநீதி அரசாட்சி செய்யும். திருடர்கள் காவலர்களாக இருப்பார்கள். அயோக்கியர்கள் நீதிபதியாக இருப்பார்கள்.
- - சித்தர்களின் அருள்வாசகம், மருள்வாசகம்
|

சித்தர்கள் பற்றி... | இன்றைக்கு நாட்டு நடப்பில் எல்லோரும் சித்தர்கள் என்றவுடன் நினைவு கூரும் அகத்தியர், திருமூலர், இடைக்காடர், போகர், புலிப்பாணி, அகப்பையர், பாம்பாட்டிச் சித்தர், தேரையர், குதம்பையர், சட்டைநாதர் ... என்ற பட்டியலில் உள்ளவர்கள் மூலப் பதினெண்சித்தர்கள் அல்லர். இவர்கள் அனைவரும் மற்ற 48 வகைச் சித்தர்களாவர். |