மெய்யான இந்துமதம்

மெய்யான இந்துமதத்திற்கும் பொய்யான ஹிந்துமதத்திற்கும் உள்ள வேறுபாட்டு அட்டவணை.  விரிவஞ்சி ஒரு சில வேறுபாடுகள் மட்டுமே இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாக வைத்து நாட்டு நடப்பில் உள்ள மதச் செயல்பாடுகளை ஆராய்ந்தால் எண்ணற்ற வேறுபாடுகளை பிரித்துணரலாம்.


தமிழரின் இந்துமதம்   பிறாமணரின் ஹிந்துமதம்
1 கடலுள் மறைந்த குமரிக் கண்டமெனும் இளமுறியாக் கண்டத்தில் பிறந்தது  பிறமண்ணினரான பிறாமணர்கள் எனும் வட ஆரியர் இன்றுள்ள வட இந்தியாவிலுள்ள சிந்து, கங்கை சமவெளியில் குடியேறிய பிறகு தமிழருடைய இந்துமதத்தின் அடிப்படையிலே உருவாக்கியது.
2 நான்கு யுகமாக வாழ்ந்து கொண்டு இருப்பது   நான்காவது உகமான கலியுகத்தில் 2000 ஆண்டு கழித்தே பிறந்தது.
3 43,73,111 ஆண்டு காலப் பழமை உடையது. 3000 ஆண்டுகாலப் பழமை உடையது
4 எல்லோரும் வேதங்களை ஓதலாம் என்று கூறுவது  பிறாமணர்கள் மட்டுமே வேதங்களை ஓதலாம் என்று கூறுவது
5 தமிழ் மொழியையே அருளாட்சி மொழியாக உடையது  சமசுக்கிருத மொழியையே அருளாட்சி மொழியாக உடையது
6 நான்மறை, நான்முறை, நான்நெறி, நான்வேதம் என்று நூற்றெட்டுப் பூசைமொழி நூல்களை உடையது  ரிக், யஜுர், ஜாமம், அதர்வணம் எனும் நான்கு வேதங்களைக் கொண்ட பூசைமொழி நூலை உடையது
7 அருள் வந்து ஆடி அருட்செயல்களை நிகழ்த்தும் மரபை உடையது  அருள் வருவதையே நம்பாத, விரும்பாத மரபுடையது
8 இல்லற வாழ்வே நல்ல அறவாழ்வு என்ற கொள்கையை உடையது  துறவற வாழ்வே நல்ல அறவாழ்வு என்ற கொள்கையுடையது
9 சாதிமத வேறுபாடோ, உயர்வு தாழ்வோ இல்லாத சமத்துவ மெய்ஞ்ஞான மதம்    சாதிமத வேறுபாட்டு வர்ணாசிரமத் தர்மத்தையும், சாதிமத உயர்வு தாழ்வு தீண்டாமைக் கொள்கைகளையும் உடைய சனாதன மதம்
10 ஒரே ஒரு வகைப்பட்ட காதல் திருமண விதிமுறையையே உடையது   எட்டு வகைப்பட்ட திருமண விதிமுறைகளை உடையது
11 மண்ணுலக விண்ணுலகக் கடவுள்களைக் கூறுவது  விண்ணுலகக் கடவுள்களை மட்டும் கூறுவது
12 அருவ அருவுருவ உருவ உருவருவ வழிபாடுகள் நான்கையும் கூறுவது   தானே பிரம்மம் எனும் மாயாவாதத்தைக் கூறும் அருவ வழிபாட்டைக் கூறுவது
13 இலிங்கம், சத்திலிங்கம், சிவலிங்கம், அம்மன், நந்தி எனும் ஐவரையும் மூலமாக, முதலாகக் கொண்டு வழிபடுவது  இலிங்கத்தை மட்டும் வழிபடுவது
14 திருநீறு, குங்குமம், சந்தனம், சாந்து, திருமண், மை, மஞ்சள் முதலியவற்றை அருளூறு பூசனைப் பொருட்களாக நெற்றியில் அணிவது  திருநீறு மட்டுமே அணிவது
15 இப்பிறப்பு, முற்பிறப்பு, மறுபிறப்பு எனும் முப்பிறப்புக் கொள்கைகளை உடையது   ஒரே பிறப்புக் கொள்கையுடையது.
16 பெண்ணை அருளுலக வாழ்வுக்குரியவள் என்று ஏற்கிறது.   பெண்ணை அருளுலக வாழ்வுக்குக் கூடாது என்று மறுக்கிறது
17 அறவி, உறவி, மறவி துறவி எனும் நான்கு வகையான வாழ்வியல்களும் அருளுலகத்திற்கு ஏற்றவையே என்ற கொள்கையை உடையது.   துறவி வாழ்க்கை ஒன்றுதான் அருளுலக வாழ்விற்கு ஏற்றது என்று கூறுவது
18 அவரவர் தாய்மொழியில் அவரவருடைய முன்னோர்களை வழிபடுவதே அருளுலக வாழ்க்கையாகும் என்ற கொள்கையை உடையது   எவருக்கும் தொடர்பில்லாத புராண இதிகாசக் கடவுள்களை சமசுக்கிருத மொழியில் மட்டுமே வழிபடுவதுதான் அருளுலக வாழ்க்கை என்ற கொள்கையை உடையது
19 எவர் வேண்டுமானாலும் பூசைகளைச் செய்யவும் மதத் தலவராக வாழவும் முடியும் என்று கூறுவது  பிறாமணர்கள் மட்டும் பூசைகளைச் செய்யவும் மதத் தலைவர்களாக வாழவும் முடியும் என்று கூறுவது
20 அருளை அநுபவப் பொருளாக பிறருக்கு வழங்கும் அருளாளிகளையும் மருளாளிகளையும் உடையது   அருளை பிறர்க்கு வழங்கினால் தங்களுக்கு இழப்பு ஏற்படும் என்று தயங்குபவர்களை உடையது
21 48 வகைக் கருவறைகள், 48 வகை வெட்டவெளிக் கருவறைகள், 48 வகை வழிபாட்டு நிலையக் கருவறைகள் ஆகிய 144 வகைப்பட்ட கருவறைகளையும் ஏற்றுப் போற்றிப் பேணிப் பாதுகாத்துப் பயனடைவது.  48 வகை வழிபாட்டு நிலையக் கருவறைகளை மட்டுமே ஏற்றுப் போற்றிப் பேணிப் பாதுகாத்து பயனடைவது.
22 இம்மண்ணுலகில் தோன்றிடும் மதங்கள் அனைத்தையும் தங்களுக்குத் துணையானவைகளாக ஏற்றுப் போற்றி நட்போடு வாழுவது   இம்மண்ணுலகில் தோன்றிடும் மதங்கள் அனைத்தையும் தங்களுக்கு எதிரியாக, போட்டியாக நினைத்துப் பகையோடு சண்டையிட்டுக் கொண்டே யிருப்பது
23 எத்தகையவரும் பயிற்சி முயற்சிகளால் அருளைப் பெற்று நலமடையலாம் என்று கூறுவது   பெரிய பெரிய செல்வர்களும் மன்னர்களும் மட்டுமே யாகங்களை செய்து அருளைப் பெற்று நலமடையலாம் என்று கூறுவது
24 ‘மனிதன் தான் கடவுளாகிறான்’ என்ற தத்துவத்தையும் அதற்குரிய செயல் சித்தாந்தத்தையும் வழங்குவது. கடவுள் எப்பொழுதாவதுதான் மனித வடிவில் தோன்றுகிறார் என்ற புராண இதிகாசக் கதைகளைக் கூறுகிறது.
25 கடவுள் இம்மண்ணுலக வாழ்வியலின் எல்லா வகையான உறவு முறைகளிலும் தோன்றி அன்பு செலுத்திக் காப்பவராகக் கருதுகிறது.   கடவுளை விண்ணுலக வாழ்வின் தலைவராக, முதலாளியாக, சர்வாதிகாரியாகக் கருதுவது
26 பொதுவாகக் கோயில்களில் ஒன்பது கோள்களையும் ஒரே நேர்கோட்டில் ஒரே திசையில் பார்த்திருக்கும்படி நிலைநிறுத்தி மக்கள் அருள்நலம் பெறச் செய்திட உதவியிருப்பது.   ஒன்பது கோள்களையும் வெவ்வேறு திசைகளில் பார்த்திருக்கும்படி நிலைநிறுத்தி யாருமே அருள்நலம் பெறமுடியாமல் போகச் செய்திருப்பது.
27 மாரியம்மன், காளியம்மன், அங்காளம்மன், பகவதியம்மன், செல்லியம்மன், ... முதலிய 243 சத்திகளை ஏற்று வழிபடுவது  மாரியம்மன், காளியம்மன், அங்காளம்மன், பகவதியம்மன், செல்லியம்மன், ... முதலிய 243 சத்திகளை துஷ்ட தெய்வங்கள் என்று ஒதுக்கி வைப்பது
28 எல்லா நல்ல செயல்களையும் ஆரம்பிப்பதற்குரிய பீடுடைய மாதமாக மார்கழியைக் கருதுவது   எந்த நல்ல காரியத்தையும் ஆரம்பிக்கக் கூடாத பீடை மாதமாக மார்கழியைக் கருதுவது.
29 புத்தாண்டு பிறக்கின்ற முதல் மாதம் தைமாதம் என்ற கணக்கினை உடையது.  புத்தாண்டு பிறப்பது சித்திரை மாதம் என்ற கணக்கினை உடையது.
30 வாரத்தின் நாட்கள் வியாழக் கிழமையில் ஆரம்பித்து வெள்ளிக் கிழமையில் முடிவது. வாரத்தின் நாட்கள் ஞாயிற்றுக் கிழமையில் ஆரம்பித்து சனிக்கிழமையில் முடிவது.
31 ஆதிசிவனார் காலத்திலிருந்து இன்று 2010 வரை இந்துமதம் தோன்றிய ஆண்டுக் கணக்கு நான்கு யுகங்களாகச் சேர்த்து மொத்தம் 43,73,111 ஆண்டு என்ற நெடிய தொடர் காலக் கணக்கீட்டு முறையிருக்கிறது.  60 ஆண்டுகளுக்கு ஒரு முறை காலக் கணக்கீட்டை முடித்துக் கொள்ளுகின்ற முறையினை மட்டுமே உடையது.
32 இராமாயண நாயகனான இராமதேவனை கங்கைக் கரைத் தமிழனென்றும் மகாபாரத நாயகனான கண்ணதேவனை யமுனைக் கரைத் தமிழனென்றும் மெய்ப்பிப்பது.    இராமாயண நாயகனான இராமதேவனையும், மகாபாரத நாயகனான கண்ணதேவனையும் வட ஆரியர்களென்று கூறுவது.