பெரியார் ஈ.வெ.ரா. ஓர் ஆத்திகரே.

பெரியார் ஈ.வெ.ரா.வே கூறியுள்ளார் தான் நாத்திகர் அல்ல என்று;.

14-12-1947இல் திருவண்ணாமலை திராவிடர் கழக மாநாட்டில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் பேசிய பேச்சிலிருந்து (சொற்பொழிவு) எடுக்கப்பட்ட வாசகம்.

“...... இஷ்டப்பட்டால் நீங்கள் கோயிலுக்குப் போங்கள் வேண்டாமென்று கூறவில்லை. பக்திப் பரவசமாகி, ஆனந்தக் கூத்தாடுங்கள். அதையும் வேண்டாமென்று கூறவில்லை. ஆனால் அந்த அழுக்குப் பிடித்த பார்ப்பணனுக்கு ஏன் தலை வணங்குகிறீர்கள்?  அவனை ஏன் தரகனாக்கிக் கொள்கிறீர்கள்? அவனுக்கு ஏன் உங்கள் காசை அள்ளி எறிகிறீர்கள்?
அவன் மொழிக்கு ஏன் அடிமையாகுகிறீர்கள் என்றுதானே உங்களை கேட்கிறோம்.

இதுவா நாஸ்திகம்? இதுவா துவேஷம்? ...”

(ஆதாரம்: ‘உண்மை’ மாதமிருமுறை ஏடு 1-6-1983 பக்கம் 5)