நான்குவகைப் பீடாதிபதிகளின் ஞான உலா

இந்துமதம் தோற்றுவிக்கப் பட்டு இன்றோடு (இந்த 1986ஆம் ஆண்டோடு) 43,73,087 ஆண்டுகளாகின்றன. இந்த நெடிய கால இடைவெளி கிரேதாயுகம், திரேதகா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்று நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டே அருளாட்சி நிகழ்த்தப்பட்டு வந்திருக்கிறது. [கிரேதகா யுகம் 17,28,080; திரேதகாயுகம் 12,96,000; துவாபரயுகம் 8,64,000; கலியுகம் 5,087]

அனாதிசங்கராச்சாரியார், அனாதிசிவாச்சாரியார், அனாதி ஈசுவராச்சாரியார், அனாதி பரமாச்சாரியார் என்று நான்குவகை ஆச்சாரியப் பீடாதிபதிகளின் முயற்சியாலும், மூலப் பதினெண் சித்தர்கள், மூலப் பதினெட்டாம்படிக் கருப்புகள், அனாதிப் பதினெண்சித்தர்கள், அனாதிப் பதினெட்டாம்படிக் கருப்புகள், தாத்தாக்கள், ஆத்தாக்கள், அம்மையப்பன்கள்,... முதலிய பலவகையினர் அருளாட்சிப் பணியில் ஈடுபட்டே இந்துமதம் எனும் சித்தர் நெறியை உருவாக்கினர்.

உருவாக்கப்பட்டு முழுமை பெற்ற இந்துமதம் செயல்படத் துவங்கிய காலத்திலிருந்துதான் யுகக் கணக்கு ஆரம்பிக்கப் பட்டது. நான்கு யுகங்களிலும் நாற்பத்தெட்டு (48) பதினெண்சித்தர் பீடாதிபதிகள் தோன்றி அருளாட்சி நாயகமாகச் செயல்படும் திட்டம் உருவாக்கப் பட்டது.

I கருவழி ஆச்சாரியார்கள்: 1. அத்திரி, 2. இத்திரி, 3. உத்திரி, 4. எத்திரி,  5. ஒத்திரி, 6. காத்திரி, 7. சாத்திரி, 8. தாத்திரி, 9. பாத்திரி, 10. நாத்திரி, 11. மாத்திரி, 13. வாத்திரி என்று பதின்மூன்று வகையினரும்,

II. குருவழி ஆச்சாரியார்கள்: 1. பத்தர், 2. பத்தியார், 3. போத்தர், 4.போத்தியார், 5. புத்தர், 6. புத்தியார், 7. முத்தர், 8. முத்தியார், 9. சீவன்முத்தர், 10. சீவன் முத்தியார், 11. அருவசித்தியார், 12. உருவசித்தியார், 13. அருவுருவசித்தியார் என்று பதின்மூன்று வகையினரும்,

III. பதினெண் சித்தர் பீடாதிபதி வழி ஆச்சாரியார்கள்: 1. அல்லாச்சாரியார், 2. ஆண்டவராச்சாரியார், 3. இயவுளாச்சாரியார், 4. இறைமையாச்சாரியார், 5. தெய்வீகாச்சாரியார், 6. கடவுளாச்சாரியார், 7. தேவாச்சாரியார், 8. பட்டாச்சாரியார், ......

என்று நாற்பத்தெட்டு (48) வகையினரும்.... உலகெங்கும் தோன்றிச் சித்தர்நெறி எனும் இந்துமதத்தைப் பசுமையாகவும் பயனுள்ளதாகவும் வளர்ப்பார்கள்.

அதாவது, தனிமனிதர்களின் பெயரால் இம்மண்ணுலகில் பல மதங்கள் காலங்கள் தோறும் தோன்றினாலும், அவை இந்துமதம் எனும் ஆற்றின் கிளை ஆறுகளாக அல்லது இந்துமதம் எனும் ஆலமரத்தின் விழுதுகளாகத்தான் செயல்பட்டிடும். இதனை

"எத்தனை யெத்தனை மதங்கள் தோன்றினாலும், அவை சித்தர் நெறி ஈன்றெடுத்த குழந்தைகளாகத்தான் இருக்கும் ......",

"இவ்வையகத்தில் வகைவகையான மதங்கள் காலங்கள் தோறும் தோன்றினாலும் அவை பதினெண் சித்தர்களின் இந்துமதம் எனும் கனிமலர்ச் சோலையில் பழுத்த கனிகளாகவும், பூத்த மலர்களாகவுமே இருந்திடும் ........"

என்ற குருபாரம்பரிய வாசகங்களால் அறியலாம்.

தமிழினத்தில் மட்டுமே தோன்றித் தெய்வீகத் தமிழால் சித்தர் நெறியெனும் இந்துமதத்தை வளவளர்ச்சி செய்து அண்டபேரண்ட அருளாட்சியைச் சீரான நிறுவன  நிருவாக ஒழுங்கமைப்புப் பெறுவதற்காக எண்வகை ஆச்சாரியார்களை உருவாக்கினார்கள், பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும்.

  1.  சிவாச்சாரியார்கள்:- தோன்ற வேண்டிய 48 பேர்களும் தோன்றிவிட்டார்கள்.
  2.  ஆதிசிவாச்சாரியார்கள்:- தோன்ற வேண்டிய 48 பேர்களும் தோன்றி விட்டார்கள்.
  3.  ஈசுவராச்சாரியார்கள்:- தோன்ற வேண்டிய 48 பேர்களும் தோன்றி விட்டார்கள்.
  4.  ஆதி ஈசுவராச்சாரியார்கள்:- தோன்ற வேண்டிய 48 பேர்களும் தோன்றி விட்டார்கள்.
  5.  பரமாச்சாரியார்கள்:- தோன்ற வேண்டிய 48 பேர்களும் தோன்றிவிட்டார்கள்.
  6.  ஆதிபரமாச்சாரியார்கள்:- தோன்ற வேண்டிய 48 பேர்களும் தோன்றி விட்டார்கள்.
  7.  சங்கராச்சாரியார்கள்:- இதுவரை நாற்பது (40) சங்கராச்சாரியார்கள்  தோன்றிவிட்டார்கள். இன்னும் மீதியுள்ள எட்டு (8) சங்கராச்சாரியார்கள் தோன்ற வேண்டும்.
  8. ஆதிசங்கராச்சாரியார்கள்:- இதுவரை முப்பத்திரண்டு (32) ஆதி சங்கராச்சாரியார்கள் தோன்றியுள்ளார்கள். இன்னும் மீதியுள்ள பதினாறு (16)  ஆதிசங்கராச்சாரியார்கள் தோன்ற வேண்டும்.

இதேபோல்,

தோன்றியுள்ளார்கள்.

இன்னும், ஒரே ஒரு தேவகுமாரன், பதினாறு புத்தர்கள், இருபத்தோறு தீர்த்தங்கரரகள் தோன்ற வேண்டும்.

இவர்களால் மறுமலர்ச்சி பெறும் கலியுகப் பகுதியை அருளாட்சி செய்வதற்காக முப்பத்தாறு (36) பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்ற உள்ளார்கள்.

    குருவும் திருவும் ஒன்றென உணர்ந்திடு
    குருவே அனைத்துக்கும் வழியென உணர்ந்திடு
    குருவே அருளுலக விழியென உணர்ந்திடு
    குருவே சித்திகளுக்கு வழித்துணையென உணர்ந்திடு
    குருவே போதனைகளின் சாதனையென உணர்ந்திடு
நிறுவன நிர்வாகக் குழு

இந்து மறுமலர்ச்சி இயக்கம்