Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • பெரியார்>
  • பெரியார் நாத்திகர் அல்ல!
  • பெரியார் நாத்திகர் அல்ல!

    பெரியார் நாத்திகர் அல்ல!

    பெரியார் ஈ.வெ.ரா.வே கூறியுள்ளார் தான் நாத்திகர் அல்ல என்று.

    14-12-1947இல் திருவண்ணாமலை திராவிடர் கழக மாநாட்டில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் பேசிய பேச்சிலிருந்து (சொற்பொழிவு) எடுக்கப்பட்ட வாசகம்.

    “…… இஷ்டப்பட்டால் நீங்கள் கோயிலுக்குப் போங்கள் வேண்டாமென்று கூறவில்லை. பக்திப் பரவசமாகி, ஆனந்தக் கூத்தாடுங்கள். அதையும் வேண்டாமென்று கூறவில்லை. ஆனால் அந்த அழுக்குப் பிடித்த பார்ப்பணனுக்கு ஏன் தலை வணங்குகிறீர்கள்? அவனை ஏன் தரகனாக்கிக் கொள்கிறீர்கள்? அவனுக்கு ஏன் உங்கள் காசை அள்ளி எறிகிறீர்கள்? அவன் மொழிக்கு ஏன் அடிமையாகுகிறீர்கள் என்றுதானே உங்களை கேட்கிறோம். இதுவா நாஸ்திகம்? இதுவா துவேஷம்? …”

    (ஆதாரம்: ‘உண்மை’ மாதமிருமுறை ஏடு 1-6-1983 பக்கம் 5)


    “… கோயில் கட்டுவதும் நீ, கும்பாபிசேகம் செய்வதற்குப் பொருள் கொடுப்பதும் நீ. சாமியின் பூசைக்கும், சாப்பாட்டிற்கும் படியளப்பதும் நீ. அந்தச் சாமிக்கு தன்னைப் போல் உச்சிக்குடுமி வைத்து விட்டு தன்னைப் போல் பூணூலும் போட்டுவிட்டு நீ கொடுத்த துணியைத் தன்னைப் போல் பஞ்ச கச்சம் வைத்து அதற்கு உடுத்தி விட்டு அதன்மீது மாட்டு மூத்திரத்தைத் தெளித்து விட்டு ‘சாமிக்கு உயிர் வந்துடுத்து, இனி எட்டி நில், தொடாதே’ என்று உன்னிடம் கூறி விடுகிறானே பார்ப்பான். நீ அவனையும் தொடக் கூடாது, சாமியையும் தொடக்கூடாது. நீ அவன் சாப்பிடும் போதும் பார்க்கக் கூடாது, அந்தச் சாமி சாப்பிடும் போதும் பார்க்கக் கூடாது. ஆனால், இரண்டு பேருக்கும் நீ தானே படியளக்க வேண்டும்? இது யோக்கியமா? ஏமாற்றுதல் அல்லவா? என்று கேட்டால் இதற்கா நாத்திகம் என்று பெயர் கொடுப்பது?…”

    (ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் 14-12-1947இல் திருவண்ணாமலை மாநாட்டில் ஆற்றிய தலைமை உரையிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி.) ஆதாரம்: “விடுதலை” 25-1-1984

    தொடர்புடையவை: