• அறிமுகம்>
  • வினா-விடைகள்>
  • குருவழி வாழ்தல்.
  • குருவழி வாழ்தல்.

    குருவழி வாழ்தல்.

    “குருவழிக் காண்க! உணர்க! பயிலுக! அடைக! தேறுக! நிற்க! சேருக புரிக!… என்கிறார்களே! இது தேவையா? (“சத்சங்கம்” சமய வாழ்வுக்கு இன்றியமையாததா?)

    அன்றாட வாழ்வின் கடமைகள், உறவுகள், உரிமைகள், வெற்றிகள், தோல்விகள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள்….. முதலியவை மனிதனை ஆட்டிப் படைப்பதால் குருவின் துணையிருந்தால்தான் அனைத்தையும் சமாளித்தபடி அருளுலகச் செல்வங்களையும் சிறு சேமிப்புப் போல் (Small Savings) வாழ்நாள் முழுதும் சேர்த்து வாழ்வின் தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியும். ‘குருவில்லா வித்தை பாழ்’, ‘குருவால் தொட்டுக்காட்டப் படாத வித்தை சுட்டுப்போட்டாலும் வராது!’ ‘குருவே அனைத்துக்கும் கரு’, ‘குருவும் திருவும் ஒன்றே’ என்ற குருபாரம்பரிய வாசகங்களை நினைத்திடுக. குருவுக்காக இழக்கப் போவது தமது பாவமும், துன்பமும், கவலையும்தான்… குருவோடு இரண்டறக் கலப்பதே அனைத்துச் சத்திகளையும் சித்திகளையும் முத்திகளையும் தரும்.