Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • வினா-விடைகள்>
  • சித்தர்களின் சித்தாந்தம்.
  • சித்தர்களின் சித்தாந்தம்.

    சித்தர்களின் சித்தாந்தம்.

    கேள்வி:- (தர்மச்சுடர் ஜூன் 1985, பக்கம்-39, சித்தர்களின் சித்தாந்தம்) "…. அனுபூதி ஞானம் பெற்றவர்களை (Mystics) என்ற ஆங்கிலச் சொல் குறிக்கும். அதுவே தமிழில் சித்தர் என்பதாகவும் சொல்லலாம்….."

    === விளக்கம் தேவை. ===

    பதில்:- ஆங்கிலச் சொல்லிலுள்ள Mystics குறிக்கும் பொருள் சித்தர்களை முழுமையாகக் குறிக்காது. ஏனென்றால் Mysticism என்ற தெய்வீக நெறியைத் தோற்றுவித்தவர்களே இந்தச் சித்தர்கள்தான். அதாவது இவர்களை The Creators or the Founders of the Mysticism என்றுதான் கூற வேண்டும். இதன்படி இவர்கள் இந்தத் தெய்வீக நெறியின் சிற்பியாக, படைப்பாளராக ஆகிறார்கள்.

    ஆங்கிலத்தில்’’ Divinators என்றொரு சொல் உண்டு. இதற்கு அருட்கலைஞர்கள் என்று பொருள். இந்தச் சொல் கூட சித்தர்களை முழுமையாகக் குறிக்காது. ஏனென்றால், சித்தர்கள் அருட்கலைகளின் தோற்றமாகவும், உள்ளீடாகவும், எல்லையாகவும் இருக்கிறார்கள். எனவே, தமிழில் உள்ள சித்தர் என்ற சொல்லை அப்படியே ஆங்கிலத்தில் Siddhar என்று எழுதி The Founders of Religions and Fathers of All Sciences and Arts, Philosophy and Theology என்றுதான் குறிக்க வேண்டும்.''