…… என்ற கருத்துக்களையெல்லாம் ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் கூறுகிறார்.
அனாதிசிவனார், இளமுறியாக் கண்டத்தில் இருந்த எண்ணூற்றுக்கும் மேற்பட்ட மதங்களை சமாதானப் படுத்தவும், சமநிலைப் படுத்தவும், ஒருநிலைப் படுத்தவும், ஒற்றுமைப் படுத்தவும் முயற்சிக்கும் சாதனங்களாக ‘மணுநீதி நூல்கள் பதினெட்டை’ அருளினார்கள்.
இந்து மதம், ஹிந்து மதம் - இது என்ன புதுக் குழப்பம்? என்று திகைக்க வேண்டாம். இக்கட்டுரையினை அனைவரும் படித்துணரும் போது ஆரியர்களின் பொய்யான ஹிந்துமதத்தை உணர்வர். பகுத்தறிவும், பயனுமுடைய பதினெண்சித்தர்களின் உண்மையான இந்து மதம் அனைவருக்கும் தெரிய வரும்.
சூழ்ச்சியும், சூதும், வாதும், வஞ்சகமும், சுரண்டலும், ஏமாற்றும், மோசடியும் … செய்யும் துணிச்சல் மிக்க பிறாமணர்கள் பதினெண்சித்தர்களின் ஆகம விதிகளை மீறி ஒன்பது (9) கோள்களையும் பதினெண்சித்தர்கள் உருவாக்கிய வழிபாட்டுநிலையங்களில் பல திசைகளைப் பார்த்துக் கொண்டு நிற்கக் கூடிய கூட்டமைப்புப் பீடமாக மாற்றினார்கள். … இதனால் பதினெண்சித்தர்கள் உருவாக்கிய அருள் நிலையங்கள் அனைத்தும் பாழ்பட்டன, செயலிழந்தன. அதனால் பிறாமணர்கள் தங்கள் விருப்பம்போல் பூசாறியாக, குருக்களாக, பண்டாரமாக, தேசிகராக, ஓதுவராக, பட்டராக … மாறிக் கொண்டார்கள்! மாறிக் கொண்டார்கள்!! மாறிக் கொண்டார்கள்!!!.
உண்மையான இந்துமதப்படி அண்டங்களும், பேரண்டங்களும், அண்டபேரண்டங்களும் இயற்கையாகத் தோன்றின, இவைகளில் 108 திருப்பதி அண்டங்களிலும், 243 சத்தி அண்டங்களிலும், 1008 சிவாலய அண்டங்களிலும்தான் மனிதன் வாழ்கிறான். இந்த மண்ணுலகில் பிறப்பவைகளுக்கு உரிய பணிகளைச் செய்யும் பொறுப்பை ஏற்றுச் செயல்படுமாறு செயல்பட்டவரே பிறமண் (பிற = பிறப்பிற்குரிய, மண் = இம்மண்ணுலகில்). எனவே பிற + மண் = பிறமண் என்றால் இம்மண்ணுலகில் பிறக்கக் கூடியவைகளைப் பற்றிய பணிகளைக் கவனிப்பவர் என்றுதான் பொருள். இவரும் ஒரு சித்தரே.
சித்தர் நெறியின் வாரிசாக ஈ.வெ.இராமசாமியைத் தயாரித்தவர்கள் காகபுசுண்டர் கரூர் பெரும்புலவர் மருதையா பிள்ளையும் அவர் நண்பர் சுவாமி கைவல்யமுமேயாகும்.
பொய்யான ஹிந்துமதத்தில் மேலே கூறிய வரலாற்றுக்கு முரணான செய்திகளை ஆபாசமான முறையில், அறிவுக்குப் பொருந்தாத வகையில் கூறுகிறார்கள்: ‘பிறம்ம தேவன் மடியிலிருந்து நாரதர் தோன்றினார். கட்டை விரலிலிருந்து பிரஜாபதி தோன்றினார். பிராணனிலிருந்து வசிஷ்டர் தோன்றினார். தொடர்ந்து பிரம்மனின் சங்கல்பத்தால் அத்ரி, ப்ருகு ஆகிய மஹரிஷிகள் தோன்றினர்.'
பதினெண்சித்தர்கள் உருவாக்கிய நான்கு வேதங்களின் பெயர்களிலும் நான்கு சமசுக்கிருத வேதங்களை உருவாக்கிக் கொண்ட பிறாமணர்கள் முழுக்க முழுக்க தங்களுடைய வேத மதத்தை; அதாவது, பொய்யான ஹிந்து மதத்தை மெய்யான இந்து மதமாகவே மாற்ற முயற்சித்தார்கள். அதற்காக பதினெண்சித்தர்கள் ஏற்படுத்திய வழிபடு நிலையினர்கள், வழிபாட்டு நிலையங்கள், பல்வேறு வகை அருளாளர்கள், பலவகைப் பட்ட அருளுலக நூல்கள், … முதலிய அனைத்தையுமே இருட்டடிப்புச் செய்யவும், குழப்பவும், கலக்கவும், பல புதிய கதைகளையும், புராண இதிகாசங்களையும், போலி நூல்களையும், போலி வரலாறுகளையும் உருவாக்கினார்கள்.
பதினெண்சித்தர்கள் மிகத் தெளிவாக விஞ்ஞானச் சூழலிலும், பகுத்தறிவுப் போக்கிலும், (With a Scientific atmosphere and a Rationaistic Approach) உலகின் தோற்றத்தையும், பயிரின உயிரின தோற்றத்தையும் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட பகுத்தறிவுப் போக்கும், விஞ்ஞானச் சூழலும் உடையதுதான் சித்தர்களின் இந்து மதம். அதாவது, மெய்யான இந்துமதம் என்று சொல்லப் படும் பதினெண்சித்தர்களின் இந்துமதம் முழுக்க முழுக்க அன்றாட நடைமுறை வாழ்க்கைக்குப் பயன்படக் கூடிய ஒரு சமூக விஞ்ஞானமே; இது ஒரு பகுத்தறிவுத் தத்துவமே; இது ஓர் அறிவியல் மதமே.
‘விண்ணியல்’ (The Universe = அண்ட பேரண்டம் எல்லையற்றுப் பரந்து கிடக்கும் ஒன்று) என்பது (108) நூற்றெட்டுத் திருப்பதி அண்டங்களையும், (243) இருநூற்று நாற்பத்து மூன்று சத்தி அண்டங்களையும், (1008) ஆயிரத்தெட்டுச் சீவ (சிவ) அண்டங்களையும், இவை மிதக்கும் பெருவெளிப் பரப்பையும்; உயிரணுப் பெருங்கடல் சூழ்ந்த (108 + 243 + 1008 = 1359) ஆயிரத்து முன்னூற்று ஐம்பத்தொன்பது அண்டங்களின் இயக்கம், பயிரின உயிரின நிலைகள்.... முதலியவைகளை விளக்கும் விஞ்ஞானமாகும் (The Cosmic Science).
“அருணகிரியார் பெண்ணின்பத்தை அதிகமாகத் துய்த்து தொழுநோய் வந்து தற்கொலை செய்து கொள்ள முயன்று முருகப் பெருமானால் தடுத்து ஆட்கொள்ளப் பட்ட ஞானியார்” - என்று (பிறமண்ணினர்) பிறாமணரால் ஒரு வரலாறு கூறப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறான சூழ்ச்சியான, மோசடியான வரலாறாகும்.
மெய்யான இந்துமதத்திற்கும் பொய்யான ஹிந்துமதத்திற்கும் உள்ள வேறுபாட்டு அட்டவணை. விரிவஞ்சி ஒரு சில வேறுபாடுகள் மட்டுமே இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாக வைத்து நாட்டு நடப்பில் உள்ள மதச் செயல்பாடுகளை ஆராய்ந்தால் எண்ணற்ற வேறுபாடுகளை பிரித்துணரலாம்.
இன்றைக்கு பல கோபுரங்களோடு விரிந்து பரந்து கிடக்கின்ற ஆலவாய் மதுரை மாமூதூர் மீனாட்சியம்மன் ஆலயம் தோன்றி வளர்ந்த வரலாறு (1986இல்) இன்றோடு 43,73,086 ஆண்டுகள். எனவே, இதனுடைய முழுமையான வரலாற்றை விளக்க ஆயிரக்கணக்கான பக்கங்களையுடைய தொகுதிகளாகப் பல தொகுதிகள் வெளியிட நேரிடும்.