Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி>
  • ஞானாச்சாரியார் வரலாறு - 2
  • ஞானாச்சாரியார் வரலாறு - 2

    ஞானாச்சாரியார் வரலாறு - 2

    இந்தியத் துணைக் கண்டத்தில், இந்து மதத்துக்கென உள்ள கோயில்களில் மிகப் பெரிய வரலாற்றுப் பின்னணியையுடைய கோயில் இதுதான். இக்கோயில்தான் கட்டிடக் கலையிலும், கோயில் விஞ்ஞானத்திலும், அருட் துறையிலும் புரட்சியாகக் கட்டப்பட்டது.

    குறிப்பாக, பதினெண்சித்தர்களின் ‘சித்தர் நெறியான சீவநெறி எனப்படும் இந்துமதத்துக்கு’ நான்காவது யுகமான கலியுகத்தில்தான் எல்லா விதமான சிதைவுகளும், சீரழிவுகளும் ஏற்பட்டன. இவற்றைச் சரி செய்வதற்காகத் தோற்றுவிக்கப் பட்ட புரட்சிகரமான, அருளுலக விஞ்ஞானப் புதுமையான இரண்டு கோயில்களில் ஒன்று திருச்சி மாவட்டக் கரூரில் உள்ள பசுபதீசுவரர் கோயில், மற்றொன்று தஞ்சையிலுள்ள பெரிய கோயில்.’'

    குறிப்பு:- இந்துமதத்திற்குத் தாழ்ச்சியும், வீழ்ச்சியும் ஏற்படும் காலத்து கருவறைகளின் மேல் கோபுரங்கள் கட்டி விண்ணுலகச் சத்திகளின் மூலம் இந்து மதத்திற்குத் தேவையான பாதுகாப்புகளைச் செய்திடலாம் என்பது ஏட்டிலுள்ள செய்தியாகும். இதன்படியே, பாண்டிய நாட்டில் அமைந்திருந்த பதினெண் சித்தர் நெறியான சீவநெறியெனும் மெய்யான இந்துமதத்திற்குரிய சந்திர குல அரசையும், ஆரியர்களின் வருகையால் இந்து மதத்திற்கு ஏற்படத் துவங்கிய நலிவையும் சரி செய்ய பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்கள் கரூரில் உள்ள அமராவதியாற்றங்கரையில் பசுபதீசுவரர் கோயிலைக் கருவறைக் கோபுரக் கோயிலாகக் கட்டிடத் துவங்கினார். ஆனால், அது சிறிய அளவில் அமைந்தது.

    தஞ்சைப் பெரிய கோயில் ஆனால், பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி காலத்தில் இந்து மதமான சித்தர் நெறி மிகப் பெரும் அழிவுக்கும் நலிவுக்கும் உள்ளாகி இருந்ததால் மீண்டும் இந்துமதத்தையும், தமிழினப் பேரரசை நிலை நிறுத்தவும், அருட்பேரரசு அமைக்கவும், சூரிய குல அரசை தஞ்சையில் அமைத்தார். அதற்காக கருவறைக் கோபுரக் கோயிலை மிகப் பெரிய அளவில் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால் இம்மாபெரும் சாதனையை பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் செய்து முடித்தார்.

    முதல் கோயில் கி.மு. 72 முதல் கி.மு.97 வரை நிதானமாக, எல்லா வித அருட்கலைகளையும், சாத்தர சாத்திர சாத்திறங்களையும் பயன்படுத்திப் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் கட்டினார். அவருக்குப் பிறகு இந்துமதத்துக்கென நாயன்மார்கள், ஆழ்வார்கள், பத்தியார்கள், சத்தியார்கள், சித்தியார்கள், முத்தியார்கள், நாற்பத்தெட்டு வகைச் சித்தர்கள், பதினெண் சித்தர்கள் முதலியோர் தொடர்ந்து தோன்றி இந்துமதத்தைக் காப்பாற்றினார்கள்.

    இம்மண்ணுலகுக்குப் பதினெண் சித்தர்களே அண்ட பேரண்ட அருளுலக ஆட்சி மொழியான அமுதத் தமிழ் மொழியையும்; உயிருள்ள உயிரற்ற அனைவரையுமே கடவுளாக்கும் இந்து மதத்தையும் வழங்கினார்கள். அவர்களே, தமிழையும், இந்து மதத்தையும், தமிழர்களையும் பாதுகாத்திட நான்கு யுகங்களிலும் தேவைக்கேற்ப பதினெண் சித்தர் பீடாதிபதிகள் நாற்பத்தெட்டுப் பேர் ஒருவர் பின் ஒருவராக அவ்வப் போது தோன்றிட ஏற்பாடு செய்தார்கள்.

    தமிழ்மொழியும், இந்துமதமும், தமிழர்களும் பெருமளவில் சிதைந்து, சீரழிந்து போகக் கூடிய நிலை கலியுகத்தில்தான் ஏற்பட்டது. அதற்காகவே, கி.மு. முதலாம் நூற்றாண்டில் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி தோன்றினார்.

    அதாவது, முதல் மூன்று யுகங்களுக்கும்,

    வரிசை உகம் ஆண்டுகள்
    முதல் உகம் கிரேதா உகம் (யுகம்) 17,28,000
    இரண்டாம் உகம் திரேதா உகம் (யுகம்) 12,90,000
    மூன்றாம் உகம் துவாபர உகம் (யுகம்) 8,64,000
    * மொத்தம் 38,82,000

    38,82,000 ஆண்டுகளில் ஒன்பது பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றினார்கள்.

    நான்காவது உகமான கலியுகம் 4,32,000 ஆண்டுகள் மட்டும் முப்பத்தொன்பது (39) பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றுவார்கள்.

    ஏனெனில், இம்மண்ணுலகின் தத்துவங்களுக்கும், சித்தாந்தங்களுக்கும் கருவாக இருக்கக் கூடிய ‘சித்தர் நெறியான சீவநெறி எனப்படும் இந்துமதத்துக்கும்’, ‘அண்டபேரண்டங்களின் அருளுலக ஆட்சி மொழியான அமுதத் தமிழ்மொழிக்கும்’, ‘அருளுலகப் பொருளுலக மூலவர்களாகவும், காவலர்களாகவும் நாயகர்களாகவும் உடைய தமிழர்களுக்கும்’, இந்தக் கலியுகத்தில்தான் மிகுந்த தொல்லைகளும், சிதைவுகளும், சீரழிவுகளும், சிக்கல்களும் ஏற்பட்டிடும் என்பதேயாகும். இந்தத் தமிழர்களை அவ்வப்பொழுது காப்பாற்றுவதற்காகத்தான், முப்பத்தொன்பது முறைகள் பதினெண்சித்தர் பீடாதிபதிகள் தோன்றிடும் அருளுலகத் திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.

    இத்திட்டத்தின்படி பார்த்தால், இக்கலியுகத்தில்தான் அருளாளர்களைத் தவிர வேறு எவராலும் தீர்த்து வைக்க முடியாத, நலப்படுத்த முடியாத குறைகளும், தொல்லைகளும், நலிவழிவுகளும், …. மிகுதியாக அடிக்கடி தோன்றிக் கொண்டே இருக்கும் என்பதுதான் பொருள். எனவே, காலங்கள் தோறும் தோன்றக் கூடிய பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தேவைக்கேற்ப ஏற்கனவே நாடெங்கும் உள்ள கோயில், ஆலயம், … எனப்படும் நாற்பத்தெட்டு வகையான வழிபாட்டு நிலையங்களையும் புத்துயிர்ப்புச் செய்வார்கள்.

    உலகெங்குமுள்ள மனித இனங்களில் அருளாளர்கள் தோன்ற வேண்டும் என்பதற்காக உலக மொழிகள் அனைத்திலும் அருளூறு பூசா மொழி வாசகங்களும், எல்லா நாடுகளிலும் அருளூற்றுக்களான வழிபாட்டு நிலையங்களும், எல்லா இனங்களிலுமே நாற்பத்தெட்டு வகையான அருளாளர்களும் தோன்றிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. ஆனால், அருளாளர்கள் தோன்றுவது அந்தந்த நாடும், இனமும், மொழியும் அடைந்திடக் கூடிய பக்குவ நிலையைப் பொறுத்தே அமைந்திடுகிறது. எனவேதான், ‘அண்டபேரண்டமாளும் பதினெண்சித்தர்களின் தாய்மொழியான அண்ட பேரண்ட அருளுலக ஆட்சி மொழியான அமுதச் செந்தமிழ் மொழியும், பதினெண் சித்தர்களின் சொந்த மதமான ‘சித்தர் நெறியான சீவநெறி எனப்படும் இந்துமதமும்’, பதினெண்சித்தர்கள் இம்மண்ணுலகில் தங்களுடைய தாய்நாடாகத் தேர்ந்தெடுத்த ‘தமிழ் நாடும்’ …. இம்மண்ணுலகு உய்வதற்காகத் தொடர்ந்து, அவ்வப்போது காலத்தின் தேவைக்கேற்ப நாற்பத்தெட்டு வகையான அருளாளர்களும் தோன்றிடும்படிச் செய்கின்றன.இப்படிப்பட்ட அரிய, சீரிய, பெரிய, கூரிய அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் செயலகங்களாகத்தான், தமிழ் நாட்டில் நூற்றெட்டு வகையான திருப்பதிகளும், இருநூற்று நாற்பத்து மூன்று வகையான சத்தி பீடங்களும், ஆயிரத்தெட்டு வகையான சிவாலயங்களும் உருவாக்கப் பட்டுள்ளன. இவற்றின் நிலைகளை ஆராய்வது, பழுது பார்ப்பது, புத்துயிர்ப்புச் செய்வது, பேராசை கொண்ட தவறான சத்தியாளர்களால் (மந்திரவாதி) விளைந்திடும் சிக்கல்களை அகற்றுவது முதலிய செயல்களைப் பதினெண்சித்தர்களால்தான் முழுமையாகச் செயலாக்க முடியும்.

    இப்படி, அடிக்கடி காலங்கள் தோறும் தோன்றக் கூடிய பதினெண் சித்தர்களால் மேலே குறிப்பிட்ட செப்பனிடும் பணிகள் நிகழ்ந்து வந்தாலும், பதினெண்சித்தர் பீடாதிபதி எனப்படுபவர் எப்பொழுது தோன்றுகின்றாரோ! அப்பொழுது எல்லா வகையான பாதிப்புக்களும், நலிவுகளும், சிக்கல்களும் முழுமையாக அகற்றப்பட்டு விடும்! முழுமையாக அகற்றப்பட்டு விடும்! முழுமையாக அகற்றப்பட்டு விடும்! அது மட்டும் அல்லாமல், எல்லாத் திருப்பதிகளும், சத்தி பீடங்களும், சிவாலயங்களும், இவற்றின் துணை அலுவலகங்களாகச் செயல்படக் கூடிய ‘நாற்பத்தெட்டு வகையான கருவறைகளும், நாற்பத்தெட்டு வகையான வெட்ட வெளிக் கருவறைகளும், நாற்பத்தெட்டு வகையான வழிபாட்டு நிலையக் கருவறைகளும்’ முழுமையான அருள் வலிமையும், வளமும், பொலிவும், நலமும் பெற்றிடுமாறு செய்வதையே தங்களுடைய மேலான, முதன்மையான, தலையாய கடமையாக ஏற்றுச் செயல்பட்டிடுவார்கள் பதினெண் சித்தர் பீடாதிபதிகள்.

    இப்படிப் பதினெண்சித்தர் பீடாதிபதிகள் பல்வேறு வகையான அருளுலகப் பொருளுலக இருளகற்றும் பணிகளைச் செய்ய வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள். அதற்காகத்தான் ஒவ்வொரு பதினெண்சித்தர் பீடாதிபதியும், தன்னுடைய அனைத்து வகையான செயல்களுக்கும் தொடர்ந்து எல்லா வகையான அருளாற்றல்களும் ஊற்றெடுத்து ஆற்றுப் பெருக்காக ஓடுகின்ற அளவுக்குத் தங்கள் தங்களின் ஏட்டறிவு, பட்டறிவு, அடைவுகள் (பத்தி, சத்தி, சித்தி, முத்தி எனும் நான்கு) முதலியவற்றிற்கு ஏற்பப் பேராற்றல் மிக்க புதிய ஒரு கோயிலைக் கட்டிடுவார்கள்.

    சித்தர் கருவூறா அப்படிப் பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கட்டியதுதான் தஞ்சைப் பெரிய கோயில் எனும் சத்தி இலிங்கக் கோயில். அவர் தருப்பைப் புல் வேய்ந்து குடிசைக் கோயிலாகவே விட்டுச் சென்றதுதான் கங்கை கொண்ட சோழபுரக் கோயில் எனும் சிவலிங்கக் கோயில். அவர் நாடெங்கும் பரவலாகக் கணக்கற்ற இலிங்கக் கோயில்களைப் பல்வேறு பெயர்களில் பொதுவாகக் கோயில் என்ற பெயரிலும் கட்டினார். இவற்றையும், ஏற்கனவே இருந்தனவற்றையும், அருள் வளமும், வலிமையும், பொலிவும், .... பெற்று மக்களுக்குத் தொடர்ந்து காலம் காலமாகச் செயல்பட்டிட நாற்பத்தெட்டு வகையான அருட்பட்டத்தவர்களை உருவாக்கினார்.

    அத்துடன் நாடெங்கும் பொதுநல ஆர்வம் உடையவர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சிகள் வழங்கிச் சித்தரடியான், சித்தரடியாள், சித்தரடியார் எனும் முத்தரத்தார்களையும் உருவாக்கினார். அப்படி உருவாக்கப் பட்டவர்களால் நாடெங்கும் ‘ஓமம்’, ‘ஓகம்’, ‘யாகம்’. ‘யக்ஞம்’, ‘வேள்வி’ எனும் ஐந்தினையும் செயலாக்கிப் புதிய புதிய அருட்கோட்டங்களையும், ஞானப்பள்ளிகளையும் தவச் சாலைகளையும் அமைத்து மக்களுக்கு அருளை அநுபவப் பொருளாக வழங்கினார். அப்படிப்பட்ட அருட்பணி விரிவாக்கத் திட்டம்தான் இன்று வரை தமிழினத்தின் தெய்வீகப் பண்புகளையும், அருளூறு தமிழ்மொழியையும், அருளாற்றல் மிக்க இந்து மதத்தையும், (இந்துமதம் நான்கு யுகங்களாக இருப்பது; பொய்யான இந்து மதம் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக இருப்பது. இவையிரண்டுக்குமிடையே உள்ள எண்ணற்ற வேறுபாடுகளைப் பற்றித் தனிநூல்கள் பல எழுதப்பட்டுள்ளன) வடிவம் சிதையாமல், வாழ்வு அழியாமல், செயல்நிலைகள் அடங்கி யொடுங்கி அடிமைப்பட்டு விடாமல் காப்பற்றி இருக்கிறது.

    இன்னும் சொல்லப் போனால், தமிழினம் என்ற பெயரில் ஓர் இனமே இல்லாமல் போயிருக்கும். தமிழ்மொழி என்ற ஒரு மொழி இருந்த இடம் தெரியாமலே சிதைந்து அழிந்தே போயிருக்கும். தமிழினப் பண்பாட்டுக்கும், நாகரீகத்துக்கும் செயல்நிலையில் வரலாற்றுப் பெட்டகமாக, பாதுகாப்பகமாக, கலைக் களஞ்சியமாக விளங்கக் கூடிய பதினெண் சித்தர்களால் உண்டாக்கப் பட்ட இந்துமதக் கோயில்கள் அனைத்துமே இருந்த இடமே தெரியாமல் போயிருக்கும்.

    தொடர்புடையவை: