Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி>
  • கருவறைக் கோபுரக் கோயில்
  • கருவறைக் கோபுரக் கோயில்

    கருவறைக் கோபுரக் கோயில்

    தஞ்சைப் பெரிய கோயிலை அருளாட்சிக்குரிய கருவறைக் கோபுரக் கோயிலாகக் கட்டிய ஞானாச்சாரியார் சித்தர் கருவூறார் தம் காலத்திலேயே குமரி முதல் இமயத்தின் முடி வரை உள்ள எல்லாக் கோயில்களையுமே புத்துயிர்ப்புச் செய்து முடித்தார்.

    அதனால், பதினெண் சித்தர்களின் மெய்யான இந்துமதம் என்றென்றுமே நல்ல செயல்நிலையில் வாழ்ந்திடக் கூடிய நிலை உருவாயிற்று. அது தொடர்பாக இந்தியாவின் பல இடங்களில் தஞ்சைக் கோயிலுக்குத் துணையாக கருவறைக் கோபுரம் உடைய கோயில்கள் கட்டுவதற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்.

    அவற்றைக் காலப் போக்கில்தான் கட்டி முடிக்க வேண்டும் என்பதற்காக அவற்றைக் கட்டுவதற்கும், தொடர்ந்து வாழையடி வாழையாக அருளூற்று நிலையில் காப்பதற்கும் ஒவ்வொரு கருவறைக் கோபுரக் கோயிலையும் சார்ந்து குரு, குருக்கள், குருமார், பூசாறி என்ற நான்கு தரப்பினர்களும் வாழையடி வாழையாகத் தோன்றுவதற்கு ஏற்பாடுகள் செய்தார். இந்த நால்வர்களும் அருளூறு நிலைகளையும், அறிவியல்களையும் தேவைக்கேற்ப கற்பிப்பதற்காகவும், இந்துமதக் கோயில்களின் அருளூற்றுக்களை அவ்வப் பொழுது தேவைக்கேற்பச் செப்பனிடுவதற்காகவும் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், ஆச்சாரியார்கள், பண்டாரங்கள் எனும் நான்கு திறத்தார்கள் வாழையடி வாழையாகத் தோன்றுவதற்கு ஏற்பாடுகளைச் செய்தார். தஞ்சைப் பெரிய கோயில் இவ்வரிய, பெரிய, சீரிய பயன்மிகு செயல் திட்டங்களால்தான் பதினெண்சித்தர்கள் உலகெங்கும் கட்டிய கோயில்கள்தான் கடந்த மூன்று யுகங்களிலும் இருந்ததைப் போலவே இந்த நான்காவது யுகமான கலியுகத்திலும் தொடர்ந்து எவ்விதப் பாதிப்பையும் பெறாது நல்ல வளமான அருள்நிலையிலேயே இருக்கின்றன. அதாவது, ஞானாச்சாரியார் கட்டிய தஞ்சைச் சத்திலிங்கப் பெரிய உடையாரின் பெரிய கோயில்தான் இந்துமதத்தைக் காப்பாற்றி வருகின்றது.

    ஆனால், இம்மாபெரும் நுட்ப, திட்ப, ஒட்பப் பேருண்மைகளை எப்படியோ இந்துமதத்தின் மூலவர்களாகவும், காவலர்களாகவும், அருளுலகத்தின் நாயகர்களாகவும், வாரிசுகளாகவும் உள்ள தமிழர்கள் நம்ப மறுக்கவும், மறக்கவும் ஆரம்பித்திட்டார்கள். எனவேதான், தமிழர்கள் என்ற உணர்வே இல்லாமல் போய்விட்டது’! …. தமிழினம் என்ற கட்டுக் கோப்போ, வடிவமைப்போ, பற்று பாசமோ, … இல்லாமல் போய்விட்டது. தமிழ்மொழி, தமிழர்களுக்கே என்ற பற்றோ, பாசமோ, உரிமையுணர்வோ, பெருமித உணர்வோ இல்லாமல் போய்விட்டது!.

    தமிழர்களுக்கே தங்களுடைய பாரம்பரிய பெருமைகளைப் பற்றியோ, உரிமைகளைப் பற்றியோ, முன்னோர்களின் வரலாறுகளைப் பற்றியோ, அகப்பண்பாட்டின் சிறப்புப் பற்றியோ, புற நாகரீகத்தின் மேன்மை பற்றியோ, தாய்மொழியின் அமுதத் தமிழின் அருட்தன்மை பற்றியோ, இலக்கிய வளம் பற்றியோ, தமிழ் நாட்டின் தொன்மைமிகு கடவுட் சிறப்புப் பற்றியோ, தங்களுடைய மதமான இந்துமதத்தின் அண்டபேரண்டமாளும் அருள்நிலை பற்றியோ நினைவே இல்லாமல் போய்விட்டது.

    இவற்றால் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் ஏறத்தாழ எந்த வகையான தன்னுணர்வோ, தன்னம்பிக்கையுணர்வோ, மொழியுணர்வோ, நாட்டுணர்வோ, இனமான உணர்வோ, தன்மான உணர்வோ….. நினைவுக்கே வராமல் அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காக இரைதேடி வாழும் உயிரினங்கள் போல் அச்ச கூச்ச மாச்சரியங்களுக்கு ஆட்பட்டு அடிமை வாழ்வு வாழுபவர்களாகி விட்டார்கள்.

    எனவேதான், ஞானாச்சாரியார்களின் போதனைகளாலும், சாதனைகளாலும்தான் அருளுலக இருள்களையும், பொருளுலக இருள்களையும் அகற்றக் கூடிய தமிழர்களையே மீண்டும் ஒற்றுமையுணர்வும், ஒருமைப்பாட்டுணர்வும், கட்டுப் பாட்டுணர்வும் உடைய தமிழர்களாக உருவாக்க முடியும். அதற்காகத் தஞ்சைப் பெரியகோயிலின் முழுமையான வரலாற்றை முறையாகப் பரப்புதலும், இந்துமதத் தந்தையான பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் சாதனைகளையும், போதனைகளையும், அவர் தோற்றுவித்த பிற்காலச் சோழப்பேரரசின் வரலாற்றுப் பின்னணியில் விளக்கிட வேண்டும்.

    குருதேவர் இவ்வரிய பெரிய பணியைத்தான் நெடிய பெரிய இடைவெளிக்குப் பிறகு பதினெண்சித்தர் மடாதிபதியாக, கருகுல ஆதீனமாக, பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாகத் தோன்றியிருக்கும் ஞானாச்சாரியார், இந்துமதத் தந்தை, குருதேவர், நிறையக்ஞர், கருவறை மூலவர்களின் அம்மையப்பர், அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம், தத்துவ நாயகம், குவலய குருபீடம், குருமகா சன்னிதானம்,ஞாலகுரு சித்தர் அரசயோகி கருவூறார் அவர்கள் தொடர்ந்து துவக்கியிருக்கிறார்.

    அதாவது, இந்தக் கலியுகத்தில் முதன் முதலாகத் தோன்றிய பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.மு. 72 இல் இந்து மறுமலர்ச்சி இயக்கம், அருட்பணி விரிவாக்கத் திட்டம், தமிழின மொழி மத விடுதலை இயக்கம்…. முதலிய 48 வகையான நிறுவன நிருவாகங்களையும் தோற்றுவித்துச் செயல்பட்டார். அவரைப் பின்பற்றித்தான் பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதியான ஞானாச்சாரியார் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் அருளாட்சி அமைத்திட்டார். அதற்காக, இந்துமத அருட்பேரரசான பிற்காலச் சோழப் பேரரசையும் உருவாக்கினார். இவற்றையெல்லாம் நினைவில் கொண்டுதான் இன்றைய பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி, அருளாட்சி நாயகமாக இப்பணியில் ஈடுபடுகிறார்.

    இவற்றைப் புரிந்து இன்றுள்ள தமிழர்கள் அனைவரும் பதினெண் சித்தர் மடத்தோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். அருளாளர்களால்தான் பொருளுலக அருளுலக இருள்கள் அனைத்தையும் முழுமையாக அகற்ற முடியும். அருளார்ந்த தத்துவங்களாலும், சித்தாந்தங்களாலும் தான் தனிமனித உரிமைகள், மொழி விடுதலைகள், இன விடுதலைகள், நாட்டு விடுதலைகள், மத விடுதலைகள் நிலையாகக் காக்கப் பட்டிடும். எனவே, அருளார்ந்த தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் புரிந்திட, பரப்பிட, செயலாக்கிட வாரீர்! வாரீர்! வாரீர்!

    தொடர்புடையவை: