Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • குருதேவர் அருளியவை>
  • அருளாட்சிக்கு அழைப்பு.
  • அருளாட்சிக்கு அழைப்பு.

    அருளாட்சிக்கு அழைப்பு.

    “இந்து மத எழுச்சியே இந்தியாவின் செழுச்சி!”

    “இந்தியாவின் செழுச்சியே இம்மானுட நல விழிச்சி!”

    பல நூறாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே! இன்றைய மண்ணுலகப் பரப்புக்களில் பல தோன்றும் முன்னரே! இமயமலையும் வட இந்தியாவும் தோன்றுவதற்கு முன்னரே! விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த மனிதன் அகப் பண்பாட்டையும் புற நாகரிகத்தையும் பெறுவதற்கு முன்னரே! இளமுறியாக் கண்டத்தில் (குமரிக் கண்டம்) பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புக்களும், நாற்பத்தெட்டு வகைப்பட்ட சித்தர்களும் ஒன்று கூடி ஆய்வுகள் நிகழ்த்தி இம்மண்ணின் ஈசர்களுக்கு (“மணிசர்கள்”) ஏற்ப உருவாக்கிய மதமே ‘இந்து மதம்’.

    மணிசர்கள் அருள் அணுக்களைத் தங்களுக்குள் கருவாக்கி உருவாக்கிடும் பத்தி நிலைகள், சத்தி நிலைகள், சித்தி நிலைகள், முத்தி நிலைகள், முறையாகவும், நிறையாகவும் வகுக்கப்பட்ட மதமே இந்துமதம். இம்மண்ணுலகோடு நிலையாக இந்துமதச் செயலகங்கள் என்றென்றும் இருக்கும் வண்ணமே ஆயிரத்தெட்டுச் சிவாலயங்களும், இருநூற்று நாற்பது மூன்று சத்தி பீடங்களும், நூற்றெட்டுத் திருப்பதிகளும், தொண்ணூற்றாறு வகை வழிபடு நிலையங்களும் உருவாக்கப் பட்டன. இவற்றின் திருவாக ‘இறை’, ‘கடவுள்’, ‘தெய்வம்’, ‘ஆண்டவர்’, ‘பட்டவர்’, ‘தேவர்’, ‘தேவதை’, ‘அமரர்’, ‘இருடி’, … ‘கணபாடிகள்’ எனப்படும் நாற்பத்தெட்டு வகையினர் தோன்றி வளர்ந்து வாழ்ந்திடும் வழிவகைகள் அனைத்தும் மிக மிகத் தெளிவாக வகுத்தளிக்கப் பட்டிருக்கின்றன பதினெண் சித்தர்களால்.

    இந்து மதம் உலக ஆன்ம நேய ஒருமைப் பாட்டின் கருவாக என்றென்றும் இருக்குமாறு ‘அருட்சினை முறைகள்’, ‘கருவறைப் புத்துயிர்ப்பு முறைகள்’, ‘எழுந்தருளி உயிர்ப்பு முறைகள்’, ‘பூசா விதிகள்’, ‘குருமார் ஒழுகலாறுகள்’, ‘அருளாளிப் படிகள்’, ‘மருளாளி ஈடுகள்’, ‘மந்திற தந்திற எந்திற சாத்திறங்கள்’, ‘ஆகமங்கள்’, ‘மீமாம்சைகள்’, ‘நிடதங்கள்’, ‘இணைநிடதங்கள்’, ‘துணை நிடதங்கள்’, ‘நான்மறைகள்’, ‘நான்முறைகள்’, ‘நானெறிகள்’, ‘நான்வேதங்கள்’, ‘நவநாதங்கள்’, ‘பதினெண்சித்தங்கள்’, ‘கருவாக்குகள்’, ‘கருவாசகங்கள்’, ‘குருவாக்குகள்’, ‘குருவாசகங்கள்’, ‘திருவாக்குகள்’, ‘திருவாசகங்கள்’, ‘அருள்வாக்குகள்’, ‘அருள்வாசகங்கள்’, ‘மருள்வாக்குகள்’, ‘மருள்வாசகங்கள்’, ‘பிறமனங்கள்’, ‘பிறணவங்கள்’, ‘பிறாமணங்கள்’, ‘காயந்திரிகள்’, ‘திசைக்கட்டுகள்’, ‘அத்திறங்கள்’, ‘பிறவாமைச்சித்திகள்’, ‘இறவாமைச்சித்திகள்’, ‘அருள்வேட்டல் மாலைகள்’, ‘அறுபத்து நான்கு வகைத் தோத்திறங்கள்’, … முதலிய எண்ணற்ற கலைநிலைகள் ஏட்டறிவாகவும், பட்டறிவாகவும் நிலைத்து நிற்குமாறு செய்துள்ளார்கள் பதினெண் சித்தர்கள்.

    அருளை அநுபவப் பொருளாகப் பெறவும்; பிறருக்கு வழங்கவும் மானுடரில் பதின்மூன்று வகையான அருளாளர்களை உருவாக்கும் வழிவகைகளை வழங்கும் ஒரே மூத்த முதல் தத்துவ மதமாக இந்து மதத்தைப் படைத்தார்கள் பதினெண் சித்தர்கள். இன்றைக்கும் சரி, என்றைக்கும் சரி, 1. பத்தர், 2. பத்தியார், 3. போத்தர், 4. போத்தியார், 5. புத்தர், 6. புத்தியார், 7. முத்தர், 8. முத்தியார், 9. சீவன்முத்தர், 10. சீவன்முத்தியார், 11. உருவ சித்தியார், 12. அருவ சித்தியார், 13. அருவுருவ சித்தியார் … எனும் பதின் மூன்று வகை அருளாளர்களும் இந்து மதத்தின் செயல் வடிவமாகவே விளங்கிடச் செய்துள்ளார்கள். எனவே, இந்து மதத்தின் அருமை பெருமைகளைச் செயல் வடிவில் விளக்கும் சான்றாகவும் ஊன்றாகவும் உங்களை உருவாக்கிக் கொள்ள வாருங்கள்! வாருங்கள்! வாருங்கள்! … என்று அழைக்கிறது இந்து சித்தாந்த மறுமலர்ச்சிக் கழகம்.

    குருதேவர்இன்றைய ஞாலகுரு, பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம் சித்தர் கருவூறார் அவர்கள் உலகெங்கும் உருவாக்கியிருக்கும் குருகுலங்களிலும், ஞானப்பள்ளிகளிலும், தவச்சாலைகளிலும், அருட் சோலைகளிலும் … அவரவர் ஊழ்வினைக்கும் விதிக்கும் ஓகத்துக்கும் முயற்சிக்கும் ஏற்பச் சமயக் கல்வி கற்றுத் தேர்ச்சி பெறலாம் வாரீர்! வாரீர்! வாரீர்! பதினெண் சித்தர்களின் சமயக் கல்வித் திட்டத்தால்தான் ‘சன்னிதானங்கள்’, ‘ஆதினங்கள்’, ‘பீடங்கள்’, ‘மடங்கள்’, ‘பண்டாரங்கள்’, ‘அமளிகைகள்’, ‘திருவடிகள்’, ‘இருக்கைகள்’, ‘அருளாளிகள்’, ‘அருளாடு நாயகங்கள்’, ‘மருளாளிகள்’, ‘மருளாடு நாயகங்கள்’, ‘நாளோலக்க நாயங்கள்’, ‘திருவோலக்க நாயகங்கள்’ … எனப்படும் நாற்பத்தெட்டு வகையான அருளாளர்களும் முறையாக உருவாக முடியும். எனவே, ஆர்வமுடையவர்கள் குருதேவரையோ அவரது அடியார்களையோ! நாடுங்கள்; அனைவரின் ஆவிகளும், ஆன்மாக்களும், உயிர்களும் தனித்தன்மை பெற்று விடுதலை பெறும் வாய்ப்புக்களும் வழிவகைகளும் வசதிகளும் வாரி வாரி வழங்கப்படுகின்றன. வாரீர்! வாரீர்! வாரீர்!

    இந்து மதம் ஒரு சமூக விஞ்ஞானமே. இதுவே, அனைத்து ஞானங்களுக்கும் தாய். இதன் மூலமே, அனைத்துலக வேற்றுமைகளும், போட்டிகளும், பொறாமைகளும், போரட்டங்களும் முழுமையாக அகற்றப்பட்டு உண்மையான ஒற்றுமை உருவாக்கப்பட முடியும். பதினெண் சித்தர்கள் அனைவரும் மானுட இனம் இந்து மதத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே “உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம் அமைக்கும் சித்தர் நெறியே இந்து மதம்” என்று ‘குருபாரம்பரியம்’ எனும் சமய வரலாற்று நூலில் மிகத் தெளிவான அறிவிப்பை வழங்கியுள்ளார்கள். இக் குருபாரம்பரியம் ‘இந்து’ என்ற சொல்லுக்கு நாற்பத்தெட்டு வகையான பொருளுடைச் சொற்களை விளக்கமாக வழங்குகிறது. இதனால், உலக மக்கள் ஒவ்வொருவரும் தங்களை இந்து என்று கூறிக் கொள்ளும் பெருமையையும் உரிமையையும் பெறுகின்றனர். இந்த, இந்து மதம் தான் ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்தது. எனவே, இன்றைய இந்துக்கள் தங்களுடைய சமயக் கலைகளைக் கற்றுத் தேர்ந்து உலகம் முழுவதும் அருளொளி பரப்பிட, மெய்ஞ்ஞானப் பயிர் விளைவித்திடத் தன்னலமின்றி முன் வரல் வேண்டும்.

    அனைத்தும் குருவழிக் காண்க! குருவே அனைத்துக் கருவையும் திருவையும் இணைக்கும் பெருநிலைச் சத்தி! குரு வாழ்க! குருவே துணை! குருவே எல்லாமாகுக!

    குருதேவர், ஞானகுரு, அரசயோகி, அண்ட பேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம், இராசி வட்ட நிறைவுடையார், ஆத்தாள் அமளிகை, கொற்றவை இருக்கை, பராசத்தி திருவடி, பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் கருவூறார்.

    பாரம்பரியத் தலைவர்,
    இந்து மறுமலர்ச்சி இயக்கம்.
    தோற்றம் கி.பி. 1772.

    தொடர்புடையவை: