Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • குருதேவர் அருளியவை>
  • எங்களைச் சந்தித்தால்...
  • எங்களைச் சந்தித்தால்...

    எங்களைச் சந்தித்தால்...

    ‘இந்து மறுமலர்ச்சி இயக்கம்’ என்பது உலக மதங்கள் அனைத்துக்கும் தாயாக உள்ள இந்துமதத்தின் அருமை பெருமைகளை விளக்கியுரைப்பதன் மூலம் உலக மதங்களின் பிணைப்புக்கும் இணைப்புக்கும் வழி செய்கிறது. எனவே, இந்த ‘எங்களைச் சந்தித்தால்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள முழக்கங்களை! உலக ஆன்ம நேய ஒருமைப்பாட்டுக்குரிய மத விழிச்சி! எழிச்சி! செழிச்சி! நிலைகளை உருவாக்கிடும்.

    குருதேவர் இப்பேருண்மைகளை உணர்ந்து சித்தர் நெறியினரும் மற்றவர்களும் இம் முழக்கங்களை அனைத்து நிகழ்ச்சிகளிலும் இடம் பெறச் செய்ய வேண்டும். அது தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு ஆகிய ஐந்து வகை வாழ்வுகளையும் சிறப்பிக்கும், செயல்நிலைப் படுத்தும்.

    இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் பாரம்பரிய இரண்டாவது தலைவர், காக்கா வழியன் பண்ணையாடி, உலக மகா மார்க்சீயச் சிந்தனையாளர், உலகப் பொதுவுடமை இயக்கச் சிற்பி, இந்தியப் பொதுவுடமைச் சித்தாந்தத் தந்தை, சித்தர் காகபுசுண்டர் ம.பழனிச்சாமிப் பிள்ளை அவர்கள் தொகுத்த கொள்கை விளக்க முழக்க ‘வசனக் கவிதைகள்’, ‘வசனங்கள்’, ‘உரைநடைக் கொத்து’ …. இன்றைய இ.ம.இ. தலைவர், குருமகாசன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறார் தொகுத்தளிக்கிறார்.

    இந்துமதத் தந்தை.
    30/11/1985


    1. இந்துமதம் பற்றிய பேருண்மைகளைப் புரிந்து கொள்ளலாம்.

    2. இந்துமதத்தில் உள்ள ஆபாசங்கள், ஏமாற்றுகள், மூடநம்பிக்கைகள், சுரண்டல்கள், காட்டுமிராண்டித் தனங்கள், பழக்க வழக்கங்கள், … முதலிய அனைத்தையும் அகற்றிட இந்துமதத்தைத் தோற்றுவித்த வாரிசு வந்திருக்கிறார். இந்துமதத் தந்தையாகப் பொறுப்பேற்றிருக்கும் 12வது பதினெண் சித்தர் பீடாதிபதியே மேற்கண்ட தவறுகளையும், குறைகளையும் நீக்க வந்திருக்கிறார். வாரீர்! வாரீர்! வாரீர்!

    3. இம் மண்ணுலகில் தோன்றியுள்ள அனைத்து மதங்களுக்கும் மூலமதமாக, முதல்மதமாக தாய்மதமாக இருக்கின்ற தமிழர்களின் மெய்யான இந்துமதத்துக்கு மத வெறி கிடையாது. மதப் பொறாமை கிடையாது, கிடையாது. எனவேதான், இந்து மத மறுமலர்ச்சியின் மூலம்தான் உலக மதங்களை இணைக்க முடியும். பிணைக்க முடியும்.

    4. இந்துமதத்தின் பெயரால் இசுலாம், கிறித்துவம், புத்தம், சமணம் போன்ற மதங்களைத் தாக்குவது தவிர்க்கப் படும்.

    5. மதச் சண்டைகளை வளர்க்கும் ஆரிய வேதமதத்தின் முகத்திரை கிழிக்கப்படும்.

    6. சாதிவெறிகளைத் தூண்டிவிடும் ஆரிய வேதமதத்தின் சதித் திட்டங்கள், சூழ்ச்சிச் செயல்கள் அம்பலமாக்கப் படும்.

    7. இந்துமதம்தான் தமிழருடையது! ஹிந்துமதம் ஆரியருடையது. இப் பேருண்மைகளைப் புரிய வாரீர்!

    8. மெய்யான இந்துமதப்படி தமிழினத் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. 64வது சொல்லடி நாயனாராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். விவரங்களை அறிய வாரீர்!

    9. மெய்யான இந்துமதப் படி மேலைய நாட்டு கம்யூனிசச் சித்தாந்தத் தந்தை கார்ல்மார்க்சு நவநாத சித்தராக அறிவிக்கப் பட்டிருக்கின்றார்.

    10. காலடி ஆதிசங்கராச்சாரியார் ஒரு தமிழரே’ என்ற பேருண்மையைத் தெரிந்து கொள்ள வாருங்கள்.

    11. இளமுறியாக் கண்டத்தில் 43,73,086 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப் பட்ட இந்துமதத்தால்தான் தமிழினத்திற்கு தன்மானத்தையும், தன்னம்பிக்கையையும், சுயமரியாதையையும், பெருமையையும் மீட்டுத் தரமுடியும்.

    12. தமிழன் தன்னைப் பாதுகாக்கக் கூடிய இந்துமதத்தைத் துறந்ததாலும், மறந்ததாலும்தான் உலகெங்கும் பழியையும், இழிவையும் அடைகின்றான். எனவே, தமிழன் தன்னுடைய இந்துமதத்தைப் புரிந்து ஏற்றுக் கொள்வதின் மூலம்தான் மீண்டும் தமிழினம் ஒற்றுமையும், வலிவும், ஆட்சியும் உருவாக்க முடியும்.

    13. இந்துமத மறுமலர்ச்சி மூலம்தான் தமிழனுக்கு மொழி உணர்வையும் ஊட்ட முடியும்! ஊட்டமுடியும்! ஊட்டமுடியும்!

    14. பிறமண்ணினரான பிறாமணர்கள் எனப்படும் வட ஆரியர்கள் தமிழ் மொழியையும், தமிழர்க்குரிய வரலாற்றையும், தமிழரின் மெய்யான இந்துமதத்தையும் எப்படி யெல்லாம் சிதைத்துச் சீரழித்துள்ளார்கள் என்பதையும்; மறைத்துத் திரித்துள்ளார்கள் என்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

    15. குவலய குருபீடம் இந்துமதத்தின் குறைகளையும், கறைகளையும் முறையாக நிறையாக விளக்கிட முன்வந்துள்ளார்.

    16. ஞானாச்சாரியார், இந்து மறுமலர்ச்சி இயக்கத்திற்கு பகுத்தறிவுப் பகலவன் பெரியார் ஈ.வெ.ரா.வை கெளரவத் தலைவராக அறிவித்துள்ள புரட்சிக் கருத்துக்களை கேட்க வாருங்கள்.

    17. பன்னிரு திருமுறைகள், சாத்திறங்கள் தோன்றிய வரலாற்றை தெரிந்து கொள்ள வாருங்கள்.

    18. தமிழினமே! உனக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்களைப் போக்கிக் கொள்ள சித்தர்களுடைய இந்துமதம்தான் வழிகாட்டியாக, வழித்துணையாக, வழிப்பயனாக இருக்க முடியும்! இப்பேருண்மைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.

    19. தமிழகத்திலுள்ள அனைத்து வகையான இயக்கங்களும் தமிழர்களை ஒற்றுமைப் படுத்துவதில் தோல்வி கண்டு விட்டன. தமிழர்களின் உரிமைகளையும், பெருமைகளையும் மீட்டுத் தருவதில் தோற்றுப் போயின. எனவே, தமிழர்களே விழிச்சி பெறுங்கள். எழுச்சி பெறுங்கள்! உங்களுக்கு வழிகாட்ட வந்திருக்கும் தமிழின குலகுரு, தமிழினத் தலைவர், தமிழ்மொழித் தலைவர், தமிழ்ப் பண்பாட்டுத் தலைவர், குவலய குருபீடம், ஞானாச்சாரியாரை சந்திக்க வாருங்கள். அருளுலக, பொருளுலகச் சிக்கல்களைப் போக்கிக் கொள்ளுங்கள்.

    20. கடவுள் மனிதனாக வருவான் என்று காத்திருக்கத் தேவையில்லை. மனிதர்களையே கடவுளாக மாற்றும் சித்தர்களின் இந்துமதத்தினைத் தெரிந்து கொள்ள வாருங்கள். செயல்பட வாருங்கள்.

    21. வடலூர் அருட்பெருஞ்சோதி இராமலிங்க அடிகளாரின் மெய்யான வரலாற்றை அறிந்து கொள்ள வாருங்கள்.

    22. வடஆரியர்களின் பொய்யான ஹிந்துமதத்திலிருந்து விடுபட வாருங்கள்.

    23. நாயன்மார்கள், ஆழ்வார்கள், மெளன குருக்கள், மெளன சாமிகள், தாயுமானவ சாமிகள், தாயுமானவ அடிகள், பட்டினத்தார்கள், அருணகிரியார், மற்ற பத்தியாளர்கள், சத்தியாளர்கள், சித்தியாளர்கள், முத்தியாளர்கள்… முதலியவர்களின் மெய்யான வரலாற்றைத் தெரிந்து கொள்ள வாருங்கள்.

    24. தேவகுமாரன் ஏசா - ஈசா பற்றிய பேருண்மைகளை அறிந்து கொள்ள வாருங்கள்.

    25. தமிழரின் மதமான இந்துமதம் ஈன்றெடுத்தவையே உலக மதங்கள் என்ற பேருண்மையை உணர்த்திக் கொள்ள வாருங்கள்.

    26. காணுகின்ற கோயில்களின் மெய்யான தத்துவ விளக்கங்களைக் காண வாருங்கள்.

    27. ‘சித்துக்களை அத்தவர்களே சித்தர்கள்’ என்ற தத்துவத்தை உணர வாருங்கள்.

    28. இந்துமதம் அக வாழ்க்கைக்கும், புற வாழ்க்கைக்கும் எப்படி யெல்லாம் பயன்படும் என்பதைப் புரிந்து கொள்ள வாருங்கள்.

    29. அருளை அநுபவப் பொருளாகப் பெறும் வழிமுறைகளை அறிந்து கொள்ள வாருங்கள்.

    30. மனிதர்கள் கடவுள்களாக மாறியதே மெய்யான இந்துமதம் என்ற பேருண்மைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.

    31. போலியான மதமறுப்பும், வெறுப்பும், காலியான கூலி வாழ்க்கையைத்தான் தரும் என்ற பேருண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்! வாருங்கள்!

    32. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்ற தத்துவப் பசியைத் தீர்த்துக் கொள்ள வாருங்கள்; ஆன்மீகத் தாகத்தைத் தணித்துக் கொள்ள வாருங்கள்.

    33. பழம்பிறப்புக்களையும், மறுபிறப்புக்களையும் பற்றிய பேருண்மைகளைப் புரிந்து கொள்ள வாருங்கள்.

    34. இப் பிறப்பினை அடக்கி ஆள்கின்ற நாள், கோள், மீன், இராசிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வாருங்கள்.

    35. தமிழினத்துக்குரிய ஆயகலைகள் 64ஐயும் அருட்கலைகள் 48, ஏனைய கலைகளான கடவுட் கலைகளையும், தெய்வீகக் கலைகளையும், பேய்க் கலைகளையும், தேய்கலைகளையும் அறிந்து கொள்ள வாருங்கள்.

    36. தமிழன் கண்டுபிடித்த மனையடி சாத்திறங்கள், அங்கவியல், வரியியல் சாத்திறங்கள் அறிந்து கொள்ள வாருங்கள்.

    37. உருவ வழிபாட்டைக் கூறும் மெய்யான இந்துமதத்தையும், அருவ வழிபாட்டைக் கூறும் பொய்யான ஹிந்துமதத்தையும் அறிந்து கொள்ள வாருங்கள்.

    38. தமிழர்களை வீழ்த்தித் தாழ்த்தி வைத்திருக்கும் பொய்யான ஹிந்து மதத்திலிருந்து தமிழர்களை விடுவிக்க மெய்யான இந்துமதத்தை மறுமலர்ச்சி அடையச் செய்ய வாருங்கள்.

    39. உங்கள் ஒவ்வொருவரையும், உண்மையான அருளாளராக உயர்த்துவதற்குரிய வழிவகைகளைச் சொல்ல வந்திருக்கும் ஞானாச்சாரியாரைச் சந்திக்க வாருங்கள்.

    40. தமிழர்களே! “கடைவிரித்தோம்! கொள்வாரில்லை” என்ற நிலை இராமலிங்க அடிகளாருக்கு ஏற்பட்டது போல் இனியும் ஏற்பட வேண்டாம்! சிந்தியுங்கள். செயல்பட வாருங்கள்!

    41. இந்துமதத் தந்தை குருதேவரின் அருளை மருந்தாகவும், விருந்தாகவும் பெற்றுக் கொள்ள வாருங்கள்.

    42. கண்மூடித்தனமான பிறாமண எதிர்ப்பினால் தமிழினத்திற்கு நன்மையே இல்லை! இல்லை! இல்லை!

    43. காட்டுமிராண்டித் தனமான மதவிமர்சனத்தால், தமிழினத்திற்கு நன்மையே இல்லை! இல்லை! இல்லை!

    44. நாத்திக வாதத்தால் தமிழினத்திற்கு மறுவாழ்வு இல்லை! இல்லை! இல்லை!

    45. போலியான தமிழ்த் தொண்டினால் போராட்டங்களால் தமிழினத்திற்கு நன்மையே இல்லை! இல்லை! இல்லை!

    46. இந்துமத இலக்கியங்களை இழித்தும், பழித்தும் பேசுவதால் தமிழினத்திற்கு நன்மையே இல்லை! இல்லை! இல்லை!

    47. தமிழின உரிமைகளும், பெருமைகளும் வயிற்றுப் பிழைப்புக்காக நடத்துவதால் தமிழகத்திலுள்ள கட்சிகளாலும், இயக்கங்களாலும், தமிழகத்திற்கு நன்மையே இல்லை! இல்லை! இல்லை!

    48. நாத்திக வெறியோடு மதத் தலைவர்களையும், மதவாதிகளையும் புண்படுத்திப் பேசுவதால்; தமிழினத்திற்கு நன்மையே இல்லை! இல்லை! இல்லை!

    49. மதக் கல்வியையும், மத வாழ்வையும் மடமையாக எதிர்ப்பதால், தமிழினத்திற்கு நன்மையே இல்லை! இல்லை! இல்லை!

    50. தமிழர்களுக்கு அன்னியத் தலைமையும், அன்னிய வழிகாட்டலும், அன்னிய உறவும் இருக்கின்ற வரையில் தமிழனுக்கு சுய மரியாதை முளைக்காது, தன்மானம் கிடைக்காது, தன்னுரிமை பிழைக்காது.

    51. தமிழ் மொழியைத் தெரிந்தவனும், தமிழ்மொழியைக் கற்றவனும்தான் இந்துமதத்தைச் செழிக்கச் செய்ய முடியும். அப்படி இந்துமதம் செழித்தால்தான் தமிழரின் உரிமையும், பெருமையும் செழுச்சி, எழுச்சி, உயர்ச்சி, மலர்ச்சி பெற முடியும்.

    52. தமிழர்களே உங்களை உய்ய வைக்கும் மெய்யான முயற்சிகள் துவங்கி விட்டன என்பதை உணர்ந்து மெய்யான இந்துமதத்தை உணர வாருங்கள். கருத்து விளக்கம் பெற வாருங்கள்.

    53. தமிழர்களே நம்மிடையில் ஒற்றுமை உருவாகும் வழிகளை உணரலாம். வாருங்கள்.

    54. தமிழர்களே நமது உண்மையான வரலாறு என்ன? இலக்கியங்கள் யாவை? என்பதைத் தெரிந்து கொள்ளலாம். வாருங்கள்.

    55. தமிழர்களே நமக்கு குருபாரம்பரியம் எது? நமது குருதேவர் யார்’ நமது ஆச்சாரியார் யார்? நமது தலைவர் யார்? நமது வழிகாட்டி யார்? நமது வழித்துணை யார்? … என்பதைப் புரிந்து கொள்ள வாருங்கள்.

    56. தமிழர்களே நமது வீழ்ச்சிக்கும், தாழ்ச்சிக்கும், பிரிவுற்றுக் கிடக்கும் மாட்சிச் சிதைவுக்கும், அடிமையுணர்வுக்கும், வெறியுணர்வுக்கும் காரணமாயிருக்கும் சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ள வாருங்கள்.

    57. தமிழர்களே! நமது மொழி, நமது இனம், நமது நாடு எனும் முக்கோணக் கோட்டையைப் பழுது பார்க்கும் பணியில் பங்கு பெற வாருங்கள்.

    58. தமிழர்களே! தன்னிகரில்லா ஒற்றுமையும், பாசப் பிணைப்பும், பற்றுமிகு உறவும், கிளர்ச்சிமிகு உணர்வும், வளர்ச்சிமிகு உரிமையும் பெற்றுத் திகழக் கூடிய வருங்காலத்தை உருவாக்கும் வழிவகைகளைக் கற்றுக் கொள்ள வாருங்கள்.

    59. குடும்ப தெய்வம், ஊர் தெய்வம், குல தெய்வம், உலக தெய்வம்… என்ற இந்துமத அடிப்படைகளைத் தெளிவாகப் புரிய வாருங்கள்! வாருங்கள்.

    60. அன்னியர்களின் சூழ்ச்சிகள் பின்னிய வலையில் பிடிக்கப்பட்ட மீன்களாக நமது தலைவர்கள், கலைஞர்கள், பெரியவர்கள் பலியாவதை (விற்பனையாவதை) தடுக்கக் கற்றிட வாருங்கள்.

    61. கோயில்களும், ஆலயங்களும் இருண்டதேன்? கோலாகல விழாக்கள் கொள்கை இழந்ததேன்? என்பதைப் புரிந்திட வாருங்கள்.

    62. ஒவ்வொருவரும் அருளுலக ஞானம் பெற்றுத் திகழ வழி தெரிந்திட வாருங்கள்.

    63. மதம் மனித வாழ்வுக்குப் பயன்படாமல் கெட்டுப் போகுமாறு யார் செய்தது? எப்போது செய்தார்கள்? எப்படிச் செய்தார்கள்? …. என்ற பேருண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!

    64. மதத்தின் போதனைகளும், சாதனைகளும் முழுக்க முழுக்கப் பகுத்தறிவுப் போக்குடையவையே! விஞ்ஞான அடிப்படையைப் பெற்றவையே என்ற பேருண்மைகளைச் சான்றோடும், ஊன்றோடும் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

    65. மதமே மனித வாழ்வை ஒழுங்கும், கட்டுப்பாடும், சுறுசுறுப்பும், விறுவிறுப்பும், செயல்திட்பமும், இனிமையும், அன்பும், பற்றுப்பாசமும், ஒற்றுமையும்… உடையவராக விளங்கச் செய்து வளர்க்கிறது என்ற பேருண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

    66. அண்ட பேரண்டங்களையும் பிண்டங்களையும் விண்டுரைத்து வாழ்வியலுக்குப் பொருள் கூறும் மதத்தின் அருமை பெருமைகளையும், அரிய பயன்களையும் ஆராய்ந்து அறிந்து புரிந்து தெரிந்து உணர்ந்து ஏற்றிடலாம் வாருங்கள்! வாருங்கள்!

    கருக்கள், குருக்கள், தருக்கள், திருக்கள் எனப்படுபவர்களின் வாக்குகள், வாக்கியங்கள், வாசகங்கள், பாரம்பரியங்கள்… எனப்படும் நால்வகை இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட கருத்து விளக்கங்கள்.

    தொகுத்தவர்:

    இந்துமதத் தந்தை, தலைவர், குருதேவர், ஞானாச்சாரியார், அரசயோகி, அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம், பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகாசன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறார், குவலய குருபீடம்.

    தொடர்புடையவை: