விரிவாகப் படித்திட இங்கே தொடரவும்
பதினெண்சித்தர்கள் மிகத் தெளிவாக விஞ்ஞானச் சூழலிலும், பகுத்தறிவுப் போக்கிலும், (With a Scientific atmosphere and a Rationaistic Approach) உலகின் தோற்றத்தையும், பயிரின உயிரின தோற்றத்தையும் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட பகுத்தறிவுப் போக்கும், விஞ்ஞானச் சூழலும் உடையதுதான் சித்தர்களின் இந்து மதம். அதாவது, மெய்யான இந்துமதம் என்று சொல்லப் படும் பதினெண்சித்தர்களின் இந்துமதம் முழுக்க முழுக்க அன்றாட நடைமுறை வாழ்க்கைக்குப் பயன்படக் கூடிய ஒரு சமூக விஞ்ஞானமே; இது ஒரு பகுத்தறிவுத் தத்துவமே; இது ஓர் அறிவியல் மதமே.
பதினெண்சித்தர்கள் உருவாக்கிய நான்கு வேதங்களின் பெயர்களிலும் நான்கு சமசுக்கிருத வேதங்களை உருவாக்கிக் கொண்ட பிறாமணர்கள் முழுக்க முழுக்க தங்களுடைய வேத மதத்தை; அதாவது, பொய்யான ஹிந்து மதத்தை மெய்யான இந்து மதமாகவே மாற்ற முயற்சித்தார்கள். அதற்காக பதினெண்சித்தர்கள் ஏற்படுத்திய வழிபடு நிலையினர்கள், வழிபாட்டு நிலையங்கள், பல்வேறு வகை அருளாளர்கள், பலவகைப் பட்ட அருளுலக நூல்கள், … முதலிய அனைத்தையுமே இருட்டடிப்புச் செய்யவும், குழப்பவும், கலக்கவும், பல புதிய கதைகளையும், புராண இதிகாசங்களையும், போலி நூல்களையும், போலி வரலாறுகளையும் உருவாக்கினார்கள்.
பொய்யான ஹிந்துமதத்தில் மேலே கூறிய வரலாற்றுக்கு முரணான செய்திகளை ஆபாசமான முறையில், அறிவுக்குப் பொருந்தாத வகையில் கூறுகிறார்கள்: ‘பிறம்ம தேவன் மடியிலிருந்து நாரதர் தோன்றினார். கட்டை விரலிலிருந்து பிரஜாபதி தோன்றினார். பிராணனிலிருந்து வசிஷ்டர் தோன்றினார். தொடர்ந்து பிரம்மனின் சங்கல்பத்தால் அத்ரி, ப்ருகு ஆகிய மஹரிஷிகள் தோன்றினர்.’
உண்மையான இந்துமதப்படி அண்டங்களும், பேரண்டங்களும், அண்டபேரண்டங்களும் இயற்கையாகத் தோன்றின, இவைகளில் 108 திருப்பதி அண்டங்களிலும், 243 சத்தி அண்டங்களிலும், 1008 சிவாலய அண்டங்களிலும்தான் மனிதன் வாழ்கிறான். இந்த மண்ணுலகில் பிறப்பவைகளுக்கு உரிய பணிகளைச் செய்யும் பொறுப்பை ஏற்றுச் செயல்படுமாறு செயல்பட்டவரே பிறமண் (பிற = பிறப்பிற்குரிய, மண் = இம்மண்ணுலகில்). எனவே பிற + மண் = பிறமண் என்றால் இம்மண்ணுலகில் பிறக்கக் கூடியவைகளைப் பற்றிய பணிகளைக் கவனிப்பவர் என்றுதான் பொருள். இவரும் ஒரு சித்தரே.
சூழ்ச்சியும், சூதும், வாதும், வஞ்சகமும், சுரண்டலும், ஏமாற்றும், மோசடியும் … செய்யும் துணிச்சல் மிக்க பிறாமணர்கள் பதினெண்சித்தர்களின் ஆகம விதிகளை மீறி ஒன்பது (9) கோள்களையும் பதினெண்சித்தர்கள் உருவாக்கிய வழிபாட்டுநிலையங்களில் பல திசைகளைப் பார்த்துக் கொண்டு நிற்கக் கூடிய கூட்டமைப்புப் பீடமாக மாற்றினார்கள். … இதனால் பதினெண்சித்தர்கள் உருவாக்கிய அருள் நிலையங்கள் அனைத்தும் பாழ்பட்டன, செயலிழந்தன. அதனால் பிறாமணர்கள் தங்கள் விருப்பம்போல் பூசாறியாக, குருக்களாக, பண்டாரமாக, தேசிகராக, ஓதுவராக, பட்டராக … மாறிக் கொண்டார்கள்! மாறிக் கொண்டார்கள்!! மாறிக் கொண்டார்கள்!!!.
இந்து மதம், ஹிந்து மதம் - இது என்ன புதுக் குழப்பம்? என்று திகைக்க வேண்டாம். இக்கட்டுரையினை அனைவரும் படித்துணரும் போது ஆரியர்களின் பொய்யான ஹிந்துமதத்தை உணர்வர். பகுத்தறிவும், பயனுமுடைய பதினெண்சித்தர்களின் உண்மையான இந்து மதம் அனைவருக்கும் தெரிய வரும்.
கண்ணுக்கு விருந்தாகாது வீர உடல்!
அன்புச் சேவுக!
உரிமையை நிலைநாட்டிட ஆயுதங்களைத் தாங்கி புறப்படுகிறவன்; எண்ணற்றோர் உயிருக்கு முடிவையும், உடலுக்கு மாறா வடுவுடைய விழுப்புண்களையும் நல்குவதோடு வெற்றித் திருமகள் அளித்திடும் வீரப்புண்கள் எனும் முத்திரைகளைப் பெற்றுத் தன்னை வீர வரலாற்று மாளிகைக்குள் நுழையும் உரிமை பெற்றவனாக்கிக் கொள்கின்றான்.
இராமலிங்க அடிகளாரும் இராமகிருட்டிண பரம அம்சரும் - ஓர் ஆய்வு
நண்ப! நமது குருதேவர் தனது அநுபவங்களை ஒன்று திரட்டி இன்றைய மக்களின் எல்லா நிலைகளையும் உணர்ந்து அதற்கேற்பவே தமது செயல் திட்டங்களை வகுத்துள்ளார். நாம் யாவரும் போராட்டமோ, பெரிய பெரிய ஊர்வலங்களோ செய்யத் தேவையில்லை. நம்மில் யாரும் சிறைக்குக் கூடச் செல்லத் தேவையில்லை. எக்காரணத்தை முன்னிட்டும் நம்மில் யாரும் வன்முறைச் செயலில் ஈடுபடப் போவதில்லை.
கேள்வி:- வழிபாட்டில் இடமிருந்து வலமாகச் சுற்றி வருவதா? அல்லது வலமிருந்து இடமாகச் சுற்றி வருவதா? எப்பொழுது? எங்கே? எதற்கு? எப்படி யெப்படி? வலம் வந்து வணங்க வேண்டும்?
கேள்வி:- யார் யாரை மெய்தோயத் தரையில் விழுந்து வணங்கக் கூடாது?