Gurudevar.org
 • அறிமுகம்>
 • 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி>
 • அருளாட்சி ஆணைகள்.
 • அருளாட்சி ஆணைகள்.

  பதினெண்சித்தர் பீடாதிபதியின்

  பதினெட்டு அருளாட்சி ஆணைகள்.

  அருளாட்சி ஆணைகள் - முன்னுரை
  பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள் முன்னுரை அருளாட்சி நாயகம், ஞானாச்சாரியார், இந்துமதத் தந்தை, இராசிவட்ட நிறைவுடையார், அரசயோகி, குருதேவர் அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம் குவலய குருபீடம், குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் கருவூறார் “சித்தர் நெறி” எனும் “மெய்யான இந்துமதம்” பற்றிய விளக்கங்களையும், வரலாறுகளையும், நாயகநாயகிகளின் வாழ்வியல்களையும், போதனைகளையும், சாதனைகளையும், அடிப்படைத் தத்துவங்களையும், செயல் சித்தாந்தங்களையும், … முறையாக வழங்கும் பணி அணிபெற்றால்தான் ‘உலக ஆன்ம நேய ஒருமைப்பாடும்’, ‘உலகச் சமய ஒற்றுமையும்’, ‘உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயமும்’, ‘மொழிவிடுதலையும்’, ‘இன விடுதலையும்’, ‘பண்பாட்டுரிமையும்’, ‘நாகரிக உரிமையும்’, ‘நாடுகளின் தன்னாட்சிப் பெருமையும்’, ‘தனிமனிதத் தன்னம்பிக்கை மிகு தன்மானப் பிடிப்பும்’, ‘உலக அருளாட்சிச் செழுமையும்’, … உருவாகிடும்!

  மேலும் படிக்க...


  அருளாட்சி ஆணைகள் - வரலாற்று விளக்கம்
  குருதேவர் 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி வழங்குவது: பிற்காலச் சோழப் பேரரசை (கி.பி.785 - 1279) ஓர் அருட்பேரரசாகச் செயல்பட உருவாக்கிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள்; தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி நிறைவு செய்யும் நிலையில் வெளியிட்ட பதினெட்டு அருளாட்சி ஆணைகள். இவர் உருவாக்கிய தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் அனைத்துத் துறை ஆசிரியர்களும் மாணாக்கர்களும் விரும்பி ஏற்றுப் போற்றிப் பேணிப் பரப்பிட்ட சிறப்பினைப் பெற்றவை இந்த ஆணைகள். இந்தப் பதினெட்டு அருளாட்சி ஆணைகளைத் தஞ்சைப் பேரரசின் ஆணைகளாக அறிவிக்கத் தயங்கினான் முதலாம் இராசராச சோழன் எனும் அருள்மொழித் தேவன். இவன் ஏற்கனவே தனது அண்ணனும், சோழப் பேரரசின் இளவரசனும் ஆன ஆதித்த கரிகாலனின் கொலை பற்றிய விசாரணையில் பொறுப்பில்லாமல் காலதாமதம் செய்ததால்; பீடாதிபதியின் கோபத்திற்கு ஆளாகியிருந்தான்.

  மேலும் படிக்க...


  அருளாட்சி ஆணைகள் - 1 முதல் 10 வரை
  பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள் (பார் ஆண்ட தமிழர்கள் பராரிகளைப் போலப் பிறரின் பாதுகை தாங்கி வாழும் பரிதாப நிலைகளைப் போக்கிடும் ஆற்றல் இந்தப் பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகளுக்கு உண்டு.) கோயில்கள் வழி மட்டுமே நிகழ வேண்டிய அருளாட்சி, பொருளாட்சி: தமிழர்கள் தங்களுடைய இனத்தைச் சார்ந்தவர்களை அதிகமாக விரும்பவும், நம்பவும், மதிக்கவும், துணையாக ஏற்றுக் கொள்ளவும், வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளவும் …. நிகழ வேண்டும். அப்பொழுதுதான், தமிழினம், தன்னம்பிக்கையும், இன ஒற்றுமையும், விடுதலை வாழ்வும் பெற்றிட முடியும். இதற்காகத் தமிழ் இனநல அலுவலகங்களாகச் செயல்படும் கோயில் சொத்துக்களும் (அனைத்து வகையான வழிபாட்டு நிலையங்கள், கருவறைகள், வெட்டவெளிக் கருவறைகள் முதலியவற்றையும் கோயில் என்ற சொல் இங்கு குறிக்கின்றது.

  மேலும் படிக்க...


  அருளாட்சி ஆணைகள் - ஆணை 11
  பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள் 11வது ஆணை தமிழன் ஒற்றுமைப்பட வேண்டியதின் அவசியம் தமிழகம் முழுவதுமுள்ள கோயில்களைப் பற்றிய விவரங்களும் அவற்றின் சிறப்புக்களும் ஒவ்வொரு கோயிலிலும் அறிவிக்கப் படுகின்ற ஏற்பாடுகள் பல செய்யப் பட்டாக வேண்டும். இதற்காகத் தமிழகத்திலுள்ள கருவறை ஊழியர்கள், மற்றக் கோயில் பணியாளர்கள் கட்டாயமாக அவரவரால் இயன்றளவு தமிழகத்திலுள்ள பல கோயில்களுக்கும் சென்று தங்கி அறிவை வளர்த்துக் கொள்வதோடு; கோயில் ஊழியர்களுக்கிடையிலும், கருவறை ஊழியர்களுக்கிடையிலும் நல்ல உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், எல்லாச் சாதியார்களும் அவரவர் ஊழ்வினைப் படியும், விதிப்படியும், ஆர்வப் படியும், முயற்சிப் படியும் இந்துமதத்தின் ஊழியராக, குருமார்களாக, குருக்கள்களாக, பூசாறிகளாக, பண்டாரங்களாக உயர்வதற்கு வழிவகை பிறந்திடும்.

  மேலும் படிக்க...


  அருளாட்சி ஆணைகள் - ஆணை 12
  பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள் 12வது ஆணை மெய்யான இந்துமதப் பயிற்சி முறைகள் கோயில் கலைஞர், கூத்தர், மருத்துவர், இசை வேளாளர், ஆசாறியார், ஆசிரியர், பண்டாரம், பூசாறி, குருமார், குருக்கள்…. முதலியவர்களுக்கு அன்றாட உணவும், ஆண்டுக்கு இருமுறை உடையும், ஊதியமும் வழங்கப் படல் வேண்டும். அதாவது உரியவர்களின் உழைப்பு ஆய்வு செய்யப்பட்டு அவ்வப்போது ஊதிய உயர்வும், கூடுதலான ஊதியமும், நன்கொடையும், பரிசும் வழங்கப் படல் வேண்டும். அப்பொழுதுதான் சமுதாயத்திற்கும், அரசியலுக்கும் தேவையானவர்களை உருவாக்குகின்ற ஒரு சாதனமாகச் சமயம் பயன்பட்டிடும். இல்லாவிட்டால், சமயம் சத்திரம் சாவடிகளால் சோம்பேறிகளையும், பிச்சைக்காரர்களையும், கருத்துக் குருடர்களையும், பொருள் திருடர்களையும், மூடப் போக்குடையவர்களையும் அதிகமாக உருவாக்குகின்ற ஒன்றாகிடும்.

  மேலும் படிக்க...