Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • வினா-விடைகள்>
  • 'அருட்சினை' விளக்கம்.
  • 'அருட்சினை' விளக்கம்.

    'அருட்சினை' விளக்கம்.

    ‘அருட்சினை’ என்று பதினெண்சித்தர்கள் முறையில் எழுத வேண்டும் என்று கூறப்படுவதேன்?

    அர்ச்சனை என்று சமசுக்கிருதத்தில் கூறப்படுகின்றது. குளிர்ப் பிரதேசத்திலிருந்து ஆரியர்கள் வந்ததாலும், இன்றுவரை நாக்கு அவர்களுக்கு செம்மையடையாததாலும் ‘அருட்சினை’ என்னும் மென்மையான, இனிமையான, சொல்லும்போதே பொருள் தரக்கூடிய தமிழ்ச் சொல்லை அவ்வாறு குறிக்கின்றனர். தமிழர்களும் அவர்களின் வாழ்க்கை நடைமுறையைப் பின்பற்றுவதுதான் நாகரீகம், மதிப்பு, கௌரவம் என்று நினைப்பதால், இந்தத் தவறு தமிழ்ச் சமுதாயத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

    அருட்சினை = அருள் + சினை

    “அருளைப் பெறுவதற்கு, இறையணுக்களைப் பெறுவதற்கு சினையாக, கருவாக இருப்பது” என்று பொருள். கருவாக இருப்பது மந்திரச் சொற்கள், கருவாக இருப்பவர் ‘அருட்சினையாளர்’ என்றும் தெளிவாகக் குறிக்கப் படுகின்றது.

    இதேபோல்தான், ‘பிறச்சினை’யும். பிரச்னை என்பது தவறு. (பிறப்பு + சினை).