Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • வினா-விடைகள்>
  • திருவள்ளுவர் பற்றி.
  • திருவள்ளுவர் பற்றி.

    திருவள்ளுவர் பற்றி.

    கேள்வி:- திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரைப் பற்றிய கருத்தென்ன?

    பதில்:- இந்துமதத்தைத் தவிர வேறெந்த மதமும் பெண்களை பெண்களாகவே மதிக்க வில்லை.

    வழிபடும் இடங்களில் பெண்களை வரக்கூடாது என்று இசுலாமிய மதம் கூறுகின்றது. கிறித்துவ மதத்தில் பிற் காலத்தன்றி முற்காலத்தில் பெண்ணை வழிபடுதலோ மற்ற சமுதாய நிகழ்ச்சிகளில் பெண்களை அனுமதிப்பதோ கிடையாது. அவ்வாறேதான் புத்த மதமும், சமண மதமும்.

    பெண்ணை தாயாக, தாரமாக, வலிமை மிக்க மறுமலர்ச்சிச் சிந்தனை கொண்டவளாக இந்துமதம் தோன்றிய நாள் முதல் போற்றி வருகின்றது. இந்த அரிய கருத்துக்களை ஈரடி குறள்கள் பலவற்றில் பறை சாற்றியவர்தான் வள்ளுவர். அவர் நவநாத சித்தர்களில் ஒருவராகப் போற்றப் படுகின்றார்.