Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • கோயில்கள்>
  • கோயில் குடமுழுக்கு
  • கோயில் குடமுழுக்கு

    கோயில் குடமுழுக்கு

    குடமுழுக்கு விழாவில் குருட்டுத் தன்மை

    இம்மண்ணுலக மதங்களுக்கெல்லாம் மூலமாக, முதலாக, ஆரம்பமாக, தாயாக இருக்கின்ற இந்துமதத்தைப் பதினெண்சித்தர்கள் இம்மண்ணில் தோன்றி விலங்குகளோடு விலங்குகளாக இருந்த மணீசர்களுக்கு (மண்ணின் + ஈசர்கள் –> மணீசர் = இம்மண்ணுலக உயிரினங்களின் தலைவர்கள்) வழங்கினார்கள். அதனால் பண்படுத்தப்பட்ட மனத்தைப் பெற்ற மனிதர்கள் தோன்றினார்கள். அவர்களுக்குத் தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு என்ற முக்கோணக் கோட்டை அமைத்து வடிவப்பட்ட வளமான வாழ்வை வழங்கினார்கள் பதினெண்சித்தர்கள்.

    இந்த முக்கோணக் கோட்டையின்

    … … … எனவே, இவற்றிற்குப் பதினெண்சித்தர்களின் முறையில்தான் குடமுழுக்குச் செய்ய வேண்டும்.

    கருவறை உயிர்ப்புக் குடமுழுக்கு:-

    நள்ளிரவு இலைக்குலுங்கா நடுநிசியில்தான் நிகழ வேண்டும். இன்றைய கணக்குப்படி இரவு 11-1:30 மணி = 2:30 மணி நேரம்.

    கருவறைப் புத்துயிர்ப்புக் குடமுழுக்கு:-

    நடுப்பகல் விண்ணோக்கி இமைபிரியா உருமவேளையில்தான் நிகழ வேண்டும். இன்றைய கணக்குப்படி பகல் 11-1:30 மணி = 2:30 மணி நேரம்.

    இவற்றைக் கடைப்பிடிக்காத காரணத்தால்தான் வழிபாட்டு நிலையங்கள் காலப்போக்கில் அருள் ஊற்றெடுக்கும் ஊற்றுக் கண்கள் தடைப்பட்டுச் செயல்நலம் குன்றின. எனவே, இனியாவது இந்துமதம் காக்கப் பதினெண்சித்தர்கள் முறைப்படி குடமுழுக்கு விழாக் கொண்டாடப் படல் வேண்டும்.

    பதினெண்சித்தர்கள் படைத்த 48 வகையான வழிபாட்டு நிலையங்கள் ‘கோயில்’ என்ற ஒரு பொதுச் சொல்லால் குறிக்கப்படும் மரபு காலப்போக்கில் பிறந்தது. எனவே, குடமுழுக்கு முறைகள் நாற்பத்தெட்டு வகைப்படும். அதாவது, நாற்பத்தெட்டு வகையான வழிபாட்டு நிலையங்களும் அவையவற்றிற்கு உரிய முறையில்தான் 1) குடமுழுக்குச் சாத்திரம் 2) குடமுழுக்குச் சாத்தரம் 3) குடமுழுக்குச் சாத்திறம் 4) கருவறை உயிர்ப்பு நூல், 5) கருவறைப் புத்துயிர்ப்பு நூல் 6) எழுந்தருளி உயிர்ப்பு நூல் 7) எழுந்தருளிப் புத்துயிர்ப்பு நூல், 8) கருவறைப் படிகள், 9) பூசாவிதிகள், 10) பிறாணாயாம நூல், 11) பிறாணாயாம சாத்திறம், 12) பிறாணாயாமச் சாத்திரம், 13) பிறாணாயாமச் சாத்தரம், 14) காயந்திரி நூல், 15) காயந்திரி சாத்திறம், 16) காயந்திரி சாத்திரம், 17) காயந்திரி சாத்தரம், 18) குண்டலி ஓகம், … எனப்படும் நூல்களில் (அனைத்து வகைச் சமய நூல்கள்) சிலவற்றையாவது உணர்ந்தவர்கள் முன்னிருந்து தலைமை தாங்கிக் குடமுழுக்குச் செய்ய வேண்டும்.

    குறிப்பு:- வழிபாட்டுக்குரியவை இறை, கடவுள், தெய்வம், ஆண்டவர், பட்டவர், தேவர், … என்று 48 வகைப்படுவர். “கடவுள்” என்பது காலப்போக்கில் பொதுச் சொல்லாகி வழிபடுநிலையினரைக் குறிப்பதாயிற்று. இவற்றையும் உணர்ந்தவரே குடமுழுக்குச் செய்ய வேண்டும்.

    தொடர்பு:
    இ.ம.இ. பொறுப்பாளர்,
    பிறமாச்சாரியார்.

    தொடர்புடையவை: