Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • வினா-விடைகள்>
  • யோகாசனம் பற்றி சித்தர்கள் கூறுவது.
  • யோகாசனம் பற்றி சித்தர்கள் கூறுவது.

    யோகாசனம் பற்றி சித்தர்கள் கூறுவது.

    யோகாசனம் பற்றி சித்தர்களின் கருத்தென்ன?

    பழம் பிறப்புகள், இப்பிறப்பு, மறுபிறப்புக்களைத் தெரிந்து கொள்ள உதவுவது ஆசனம்.

    ஆசு = குற்றம் = பிறப்பு

    ஆசு + இனம் = பிறப்பின் வகைகளைத் தெரிந்து கொள்ளுதல்

    பின் வந்த 48 வகைச் சித்தர்களின் கருத்து:

    ஆது = (ஆசுவாகப் பின்னர் மாறியது) = உயிர், கடவுள், …!

    ஆ + து = ஆது = ஆவி, ஆன்மா, உயிர் மூன்றையும் துடைப்பது, தூய்மைப்படுத்துவது.

    இனம் = இப்பணி பற்றிய அல்லது இக்கலை பற்றிய விளக்க வகைகள், விளக்க இனங்கள்.

    ஆது + இனம் = ஆதனம் = ஆசனம் = மனிதரைத் தூய்மைப் படுத்தும் கலைகள்

    யோகாசனம் = யோகம் + ஆசனம்; இதனை அனைவரும் கற்கலாம்.

    ஓகாசனம் = ஓகம் + ஆசனம்; குருவால் நேரடியாகக் கற்றுத் தரப்படும்

    காலப் போக்கில் ஓகாசனம் மறைந்து விட்டது. மீண்டும் இ.ம.இ.யின் குருகுலங்களில் கற்றுத் தரப்படுகின்றன.